கருநிற வாழ்க்கை
கருநிற வாழ்க்கை
கண்ணுக்கு தெரியாத
எல்லாம் கருப்பு தான்
மனதில் உள்ள நினைவுகளும்
நீந்தி பார்க்காத கடலும்
பெண்ணின் மனதும்
கருந்துளை ஆழமும்
காற்றில் வரும் ஓசையும்
காதலியின் ஆசையும்
துளைத்த சிறு பிள்ளையும்
பருவத்தின் எல்லையும்
எரியும் எருமைச்சாணியும்
எல்லாம் மறந்த ஞானியும்
எருவில் இருக்கும் கிருமியும்
கருவில் இருக்கும் சிறுமியும்
சிலையாய் நின்ற சாமியும்
ஓலையாய் சென்ற அன்பும்
