பாதியில் பரந்த மயில்
பாதியில் பரந்த மயில்
இயற்கையில் இயங்கிட
அழைத்த இதயம்
செயற்கையில் செய்தி
சொன்னது
அந்த பறவைக்கு
முத்தமிடு மூழ்கிவிடுவாய்
என்று
மேகம் கருக்க
இளஞ்சிவப்பு உடையில்
வந்தது ஒரு மயில்
எண்ணி எண்ணி
நாட்கள் நகர்ந்தது
மேகம் கடந்தது
மயில் பறந்தது
பறந்து பிடிக்க
தெரியவில்லை
மயில் ஆடவும் இல்லை
யாரும் கூடவும் இல்லை
ஆயினும் அதன் அழகு
ஆயிரம் ஆண்டுகள்
ஆடும் விண்ணோடும்
மண்ணோடும்

