பாழடைந்த பசுமைப்பூங்கா
பாழடைந்த பசுமைப்பூங்கா
பாழடைந்த வீடு ஒன்று இருக்க
பாயில்லா படுக்கையறை இருக்க
பழைய சீலையில் பத்மினி
உலா வருகிறாள்
பெண் பார்த்த ஆணும்
ஆண் பார்த்த பெண்ணும்
உடன் இல்லை
பணத்தோடு போன மகன்
திரும்பி வந்தான்
கரிசல் காடு
பசுமை பூங்காவானது
தேக்குமரம் மெத்தை கீழ்
படுக்கையறை உள்ளே
எல்லாம் மாறினாலும்
பத்மினி சீலை மாறவில்லை
அவள் வழக்கம் போல்
பச்சை புள்ளில்
வீட்டை சுற்றி
உலா வருகிறாள்

