கடலுக்கு அடியில் காதல்
கடலுக்கு அடியில் காதல்
மழை வரும் பொழுது கவிதைகள் வருது
மனதை கடலுக்கு கொண்டு சென்றது
உடன் யாருமில்லை என்றது
முத்தமிட்ட நாட்களை தேடியதும்
முத்தாக மேலே வந்தது
அதை வலை நூலில் கோர்த்து
மாலையாக்கி கொடுக்க யாருமில்லை
திரும்பி எடுத்து செல்லவும்
தேவையில்லை என்றது மனம்
மறுமுறை வந்தால் கிடைக்காது
வேறு சிப்பிகள் கிடைக்கலாம்
அப்போது மனம் மாறலாம்
தற்போது வெறும் கைகளாக
இந்த மீனவனின் அலைகள்
கண்ணீராக கரை சேர்ந்தது

