நீல நிற தாய்
நீல நிற தாய்
கண்களை மூடினால் கனவில் வருவாள்
திறந்து பார்த்தால் திரியாய் இருப்பாள்
என் நெஞ்சில் ஒளியாய் இருப்பாள்
எந்நாளும் விழியாய் இருப்பாள்
சிலநேரம் கிளியாய் இருப்பாள்
பலநேரம் சிலையாய் இருப்பாள்
பெண்னென்று நான் கண்டவள்
பேயாக கனவில் வருவாள்
நான் பொய்யாக இருக்கையில்
கொடுத்த பழங்களை சாப்பிட
சில நாட்கள் அணிலாய் வருவாள்
பல நாட்கள் சத்தமில்லாமல் வருவாள்
இரவு நேரத்தில் சத்தத்தோடு வருவாள்
ஜல் ஜல் என்ற ஓசையுடன்
