விடுமுறை
விடுமுறை


தினம்தோறும் விடுமுறை
என்றால் கொண்டாட்டம்தான்!
காலை முழுவதும்
தூக்கம்!
மதியம் முழுவதும்
விளையாட்டு!
இரவு முழுவதும்
நல்ல திரைப்படம்!
என்று மகிழ்ந்திருந்த
நாள்பொழுதில்
முதுமை அரக்கன்
கனவினில் வந்து
வறுமைப் பசியைப்
பகிர்ந்த நாளினில்
புதையலாய் தொலைக்காட்சி
பாடங்கள் வந்தனவே!
வீட்டினில் இருந்து
தொலைக்காட்சி பாடங்கள்
கற்று நானும்
ஐயங்களை உடனே
ஆசிரியரிடம் கற்று
தெளிந்தேனே!
கொரானா வைரஸ்
தாக்கத்தால் வீட்டில்
படித்து நாமும்
அறிவு விளக்கை
ஏற்றி சாதி மதம்
இல்லா உலகை
தாய்மொழிக்கல்வியினால்
கொணர உழைப்போமே!