STORYMIRROR

Carlin Helena

Classics Inspirational Others

4  

Carlin Helena

Classics Inspirational Others

ஜெபம்

ஜெபம்

1 min
543

தூபவர்க்கத்தின் புகைப் போல

பறந்து செல்லும் விளக்குப் போல

மேலே எழுந்து விரையும்

ஜெபங்களைப் பார்!

    ஐஸ்வரியன் ஏழை என்றும்

    சம்பூரணன் தரித்திரன் என்றும்

    பாரபட்சம் பாராமல்

    அனைத்தையும் கேட்பது யார்?

முழங்கால்கள் முடங்க

கைகள் கோர்க்க

சென்ற ஆயுளும்

திரும்ப வந்ததே….

    பணத்தை கரைத்து குறி கூறினாலும்

    பொன்னை உருக்கி சிலை வடித்தாலும்

    அதிசயம் செய்பவர்

    கடவுள் ஒருவரே!


Rate this content
Log in

Similar tamil poem from Classics