STORYMIRROR

Carlin Helena

Drama Classics Inspirational

4  

Carlin Helena

Drama Classics Inspirational

பள்ளிப் பருவம்

பள்ளிப் பருவம்

1 min
334

அண்டை வீடுகளிலிருந்து

சமையல் மணத்தை முகர்ந்து

வயிற்றை நிறப்பிய பருவம்…


ஈரடி படித்து நாலடி எழுதி

ஓர் அரை மதிப்பெண் தீட்டி

தாளை எறிந்த பருவம்!!!


சிறு தூரம் நடந்து

சிறு தூரம் உருண்டு

படிகளை கடந்த பருவம்…


புத்தகம் இருந்தும் இல்லாமலும்

வீட்டுபாடம் முடித்தும் முடிக்காமலும்

நண்பருடன் வகுப்புக்கு வெளியே நின்ற பருவம்!!!


உள் இருக்கும்வரை வெளியே செல்லவும்

வெளி வந்தவுடன் உள்ளே செல்லவும்

கனவுகளில் மெய்சிலிர்க்கும் பள்ளிப் பருவம்.


Rate this content
Log in

Similar tamil poem from Drama