தேடும் இடத்தில்
தேடும் இடத்தில்
நீ எப்போதும்,
என்னிடம் ஒளிந்துதான் விளையாடுகிறாய்...
உன்னை நான் தேடுவேன்
என்று அறிந்து....
நான் தேடும் இடத்தினிலே தான்
நீ ஒளிந்து கொள்கிறாய்....
என்னே உந்தன் சிறு பிள்ளை தனமான விளையாட்டு.....
இதை ரசித்துக் கொண்டே,
உன்னை தேடிக் கொண்டிருக்கிறேன்....

