STORYMIRROR

Manoharan Kesavan

Inspirational

5  

Manoharan Kesavan

Inspirational

கொரொனா எனும் இடைவெளி

கொரொனா எனும் இடைவெளி

1 min
214

காற்றை... 

நீரை... 

நிலத்தை ...

நெருப்பை...

ஆகாயத்தை... பூமியைப் போர்த்தி இருக்கும் அண்ட வெளியை ...

இதோ இந்த இடைவெளி சுத்தம் செய்திருக்கிறது... 

கங்கை புன்னகைக்கிறாள்...

மலைகள் புதிய சுவாசம் கிடைத்த நெகிழ்ச்சியில்...

காட்டு விலங்குகள் சுதந்திர இயக்கத்தில்...

இந்த இடைவெளி தந்த சுகம்...!

குடும்ப மனிதர்களுக்கு இடையேயான நெருக்கம் இந்த இடைவெளியால் பெருகி இருக்கிறது...

வாகன போக்குவரத்து முடங்கிப்போனாலும் ஏதோ ஒரு வகையில் அது தேசிய எரிபொருள் சேமிப்பு ....

அக வாழ்க்கைத் திறன் அமைத்துக்கொள்ள இதோ இந்த இடைவெளி தேவையாய்த் தெரிகிறது...

எளிமையான வாழ்வின் அவசியத்தை இது புரிய வைக்கிறது...

இயற்கை நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருக...

 இந்த இடைவெளி துணை செய்திருக்கிறது... 

இல்லாமலா மருத்துவமனைகள் மௌனம் காக்கின்றன...நோயாளிகள் கூட்டமின்றி...

 சுகாதாரத்தின் தேவையை- மறந்து போன பாரம்பரியத்தை இந்த இடைவெளி நினைவூட்டல் செய்திருக்கிறது...

குடும்பத்தோடு வீட்டை சுத்தம் செய்யும் சந்தர்ப்பம் இந்த இடைவெளி தந்த வாய்ப்பு...

தேர்வு எழுதாமலே தேர்வான பிஞ்சு நெஞ்சங்கள் சொல்லும் வாழ்த்து இந்த இடைவெளியிலும் கேட்கவே செய்கிறது...

ஷாப்பிங் மால்கள் மூச்சடைத்துக் கிடைக்க...

தெருவோர அண்ணாச்சி கடைகளின் கரங்கள் தனது சேவையை தயங்காமல் செய்யும் பங்களிப்பை இந்த இடைவெளி உணர்த்தி உள்ளது...

படைத்தவனை குறித்த சிந்தனையை ஏதோ ஒரு விதத்தில் சிந்திக்க இந்த இடைவெளி அனுமதி தந்துள்ளது....

யாகங்களும்,ஜபங்களும்,தொழுகைகளும்,ப்ரார்த்தனைகளும் வீட்டிற்குள்ளே நிகழ வீடுகள் எல்லாம் ஆலயமான அற்புதம் இதோ இந்த இடைவெளியில்...

அஞ்சரைப் பெட்டியின் மருத்துவகுணமும் அடுப்பங்கரை பெண்டீர் மகத்துவமும் இந்த இடைவெளி தான் உணர்த்தி உள்ளது...

பேரரசுகளின் ஆணவம் எல்லாம் ஒரு - ஒரு செல் உயிரியின் காலடியில் மண்டியிட்டு தலைகுனிகிறது...

மறந்து போன மாற்று மருத்துவ முறைகளின் தேவை உணரப் பெறுகிறது... ஒவ்வொரு ஆபத்துக்குள்ளும் ஒரு வாய்ப்பு... 

அதை இந்த இடைவெளி தான் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது...

அனுபவ பாடங்கள் மறப்பதில்லை...

அதற்குத் தான் இந்த கொரொனா எனும் இ..டை..வெ...ளி... !!!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational