STORYMIRROR

Arivazhagan Subbarayan

Inspirational

5  

Arivazhagan Subbarayan

Inspirational

தமிழமுது...!

தமிழமுது...!

1 min
58

பொங்கிவரும் காவிரியும்

 பூத்துவரும் புதுநீரும்

தங்கமெனத் தகதகக்கும்

 கதிரவனின செவ்வொளியில்

சிங்கமென ஓடிவந்து

  சிலிர்ப்புடனே மண்நனைத்து

வங்கமதில் கலப்பதைநல்

  வியப்புடனே பாரீரோ?

எங்கிருந்தோ வீசுகின்ற

 இளந்தென்றல் காற்றினிலே

மங்காத தமிழிசையின்

  முழக்கத்தைக் கேட்டீரோ?

அங்கமதைச்சிலிர்க்கவைக்கும்

  ஆற்றலது தமிழுக்குண்டு!

பங்கிட்டு வாழ்கின்ற

 பண்பாடு தமிழர்க்குண்டு!

தமிழ்மணக்கும் திருநாடாம்

 தரணியிலே சீர்நாடாம்

கமழ்கின்ற அமிழ்தும்மைக்

 கவர்ந்திழுக்கும் வளநாடாம்

இமைக்காது நோக்கிடுவீர்

 இவ்வழகை எந்நாளும்

அமைதியுடன் வாழுமிங்கே

  அன்புள்ள இறையுணர்வு!

சாதியில்லை மதமுமில்லை

 சங்கடங்கள் எதுவுமில்லை

நீதியுண்டு நேர்மையுண்டு

 நெஞ்சினிலே உரமுமுண்டு!

ஆதிமுதல் அந்தம்வரை

 அரவணைக்கக் கடவுளுண்டு

தீதின்றி வாழ்கின்ற

 திறனுள்ள நெஞ்சமுண்டு!


  



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational