பழமைவாதியின் குரல்.....
பழமைவாதியின் குரல்.....
புத்தாண்டாம் இது.....
ஆம்.....
நகரத் தெருக்களில் நான் என்னை தொலைத்தும்,
அன்பு, மனிதம் இவை என்னை தொலைத்தும் நகரும் புத்தாண்டே இது.....
கிராம நாகரீகத்தின் அகதி இவன், நகரத்தை அடைந்து
முதலாளித்துவத்தை முதன்மையாய் கொண்டவரின் முன்னேற்றத்திற்காக,
நிற்க நேரமிருந்தும் நிற்காமல் ஓடிக்கொண்டும்,
பகல் மட்டுமல்லாதென் இரவுகளும் களவாடக் கண்டும்,
முன்னேற்றப்பாதையில் வாழ்க்கை பின்னடைவை தினம் கண்டும்,
செய
ற்கை நுண்ணறிவில் செயித்துக் கொண்டதாய்,
செயற்கையாய் சிரித்துக்கொள்ளும் புத்தாண்டே இது.....
என் வாழ்க்கையை இன்றெவரோ தீர்மானிக்க,
நானிங்கியல்பாய் நகர்ந்து கொண்டிருக்கும் புத்தாண்டே இது.....
விழித்தெழுந்து பின்சென்றால்,
பழமைவாதம் என பாழாக்கப்பட்டு எனைப்போல் ஒரு அகதிக்கூட்டம் என் எதிரே நகர்கிறது.
என் துவக்கம் இன்று களவாடப்பட்டதெங்கு?
சிந்தனையிலே இவையிருந்தும்,
நிதம் இயல்பாய் கடந்தும்,
இயல்பாய் சிரிக்கும் புத்தாண்டே இது.....