கவிதைக்கு தலைப்பு வேண்டுமோ?
கவிதைக்கு தலைப்பு வேண்டுமோ?
சன்னல் இருக்கையில்
சந்தோஷமாய் அமர
காற்று அடித்தும் புழுக்கத்தை உணர்ந்தேன்
புழுக்கத்தை கவிதையோடு களையலாமே..,
மன ஓட்டத்தை தடை செய்ததது
சிவப்பு சாயமிட்ட பெண்
தலையை தொங்கவிட்டவனாய் தலைப்பை தேட
பச்சை கொடி நீட்டி
வினாக்குறியோடு விடை அளித்தது
எனது பேருந்து நிறுத்தம்.
"கவிதைக்கு தலைப்பு வேண்டுமோ?"