STORYMIRROR

Chidambranathan N

Romance Fantasy Inspirational

4  

Chidambranathan N

Romance Fantasy Inspirational

காதலியின் திருமண நாள்

காதலியின் திருமண நாள்

1 min
268

என்னால் சற்றும் சிந்தனை செய்து பார்க்க முடியாத நிகழ்வாக நடந்து முடிந்த என் காதலியின் திருமண நாள்!

என்னை அவள் தனது அழகிய புள்ளி மானினைப் போன்ற கண்களால் வீழ்த்தி என்னைக் காதலிக்க வைத்துப் பிறகு ஏமாற்றிய நாள்!

காதலிக்கும்பொழுது இருவரும் இணைந்துக் கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு கலந்துரையாடிய தலைப்புகளான அன்பு, பாசம், உண்மை, காதல் மற்றும் வாழ்க்கைத் தத்துவங்கள் ஆகியவற்றினை நிலை இல்லாமல் மறந்து போகச் செய்த நாள்!

என்னைப் பார்க்க வரும்பொழுதுக் கனவுலகக் கருப்பு மயிலாகத் தோன்றிக் கருப்பு அன்ன நடை நடந்து வந்த எனது அன்புக் காதலியின் முகம் வாடி வதங்கி நின்ற நாள்!

சூழ் நிலைக் கைதியாக நின்ற எனது காதலி தன் கண்கள் இரண்டும் கலங்கிட மண மேடையில் அமர்ந்து இருந்த நாள்!

இனிதே நடந்து முடிந்த திருமணத்தில் கண்கள் கலங்கி நின்ற என் அன்புக் காதலியின் புதிய வாழ்க்கைப் பயணத்தின் தொடக்க நாள்!

எனக்குச் சரியான வேலையும் இல்லை நிரந்தமான பொருளாதார வசதியும் இல்லை என்று அவள் கூறி ஒதுக்கிவிட்டு வேறு ஒருவரை அவள் கரம் பிடித்த மறக்க முடியாத நாள்!

நிரந்தரமான வேலையும் பொருளாதாரக் காரணிகளுமே திருமணத்தின் பொழுது வெல்லப் போகும் ஆண்மையின் அடையாளமாக எனக்கு உணர்த்திய மன முதிர்ச்சி நாள்!

சாதாரண வாழ்க்கை முறைக்கும் கனவுலக வாழ்க்கை முறைக்குமான உண்மையான வேறுபாடுகளை எனக்குக் கற்பித்த நாள்!

காலத்திற்கு ஒவ்வாத அன்பையும் காதலையும் ஒதுக்கித்தள்ளுகின்ற மனப்பக்குவத்தினை தந்த நாள்!

கற்பனைக் காதலின் விளைவுகளையும் மனவேதனைகளுடன் கூடிய வெறுக்கத் தக்க நிகழ்வுகளையும் என் கண்களின் முன்னே நிகழ்த்திய நாள்!

உண்மைக்குப் புறம்பான கற்பனைக் காதலினை நானும் மறந்து எனது ஒளிமயமான வாழ்க்கைப் பயணத்தினைத் தொடங்கிய நாள்!

மிகுந்த மன முதிர்ச்சியோடு அன்புப் பாசம் மற்றும் உண்மை ஆகிய குணங்களோடு எதிர்காலத்தில் எனக்குச் சிறந்த மனைவி அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிய நாள்!


Rate this content
Log in

Similar tamil poem from Romance