பெண்னை சுற்றும் கடிவாளம்
பெண்னை சுற்றும் கடிவாளம்


ஒரு பெண் என்பவள் தன் வீட்டிலும் உரிமை இழந்து புகுந்து வீட்டிற்கு சென்றதும் பல பொறுப்புகளை தலையில் சுமக்கிறாள்.
பல உரிமைகளை இலக்கப்படுகிறாள் அவளுக்கென்று தனி கோட்பாடுகளும் கட்டளைகளும் எந்நேரமும் சுத்தியை வைத்து தட்டுவது போல் அவள் பின்னாடி கடிவாளம் போட்டு சுற்றுகிறது. ஒரு கடிகாரம் எப்படி பெரியமுள் சிறிய முள்ளை பின்தொடர்ந்து வருகிறதோ அதை போல் அவள் வாழ்க்கையில் பல திருப்பங்கள் கோவங்கள் எதிர்ப்புகள் பின் தொடர்கிறது.
அவள் திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாளோ அப்படியே சுழற்றி வீசி எறிந்த காகிதம் போல் துவண்டு போய் விடுகிறாள்.
மனதில் பல வேதனைகள் எந்த விதமான உறவுகளுக்கும் உரிமை கொண்டு பேசினால் குற்றம்.
தன் கருத்துக்களை அந்த இடத்தில கூறினால் எதிர் பேச்சு.
இவள் புரிதல் மூலம் வேறு ஏதேனும் கூறினால் தவறு.
அவர்கள் கட்டளையின்படி மீறி நடந்தால் பெருங்குற்றம்.
விதித்த விதிகளின்படி நடக்காமல் அவள் போக்கில் நடந்தால் அநியாயம்.
தன் சுபாவத்தை மாற்றி அவளுக்கென புது விதிகளை விதித்து இதுபோல தான் நடக்கவேண்டும் வாய் பேசினால் மரியாதை தெரியாதவள்.
இவளுக்கு நூறு பொற்காசுகள் அவதாரம் விதிப்பது போல் அனைத்தும் கடிவாளம் போல் ஒரு குச்சியையும் சேர்த்துக்கொண்டு முதுகில் அடித்து கொண்டே இருக்கிறார்கள்.
தனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று கூடவா ஒரு பெண்ணால் யூகிக்க முடியாது அந்த அளவிற்கு முட்டாளாக படைத்தது விட்டானா இறைவன்??
அவர்கள் கூறியபடி சொல்வதை மட்டும்தான் செய்யவேண்டும் பிடித்ததை பிடித்தவாறு செய்தால் வீட்டிற்கு இவள் சரியானவள் அல்ல என்று ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்.
காலையில் எழுவதற்கு முன்பே அந்த பெண்ணிற்கு பயம் தட்டி கொள்ளும் இன்று என்னாகுமோ தெரியவில்லை என்று.
எழுந்தவுடன் சமையக்கட்டிற்கு ஓடினாள் எங்கிருந்து அவ்வளவு பாத்திரங்களும் டம்ளர்களும் வந்ததென்று தெரியவில்லை கழுவும் இடம் முழுவதும் குவிந்து கிடக்கிறது.
அடுப்பு திட்டின் மேல் டீ கொட்டிக்கிடக்கிறது. காய்கறிகளும் குப்பைகளும் சமயக்கட்டு முழுவதுமாய் பரப்பி இருக்கிறது. சீமாரை எடுத்து இவள் தூங்கும் அறையில் கால் மிதி படும்படி போட பட்டிருக்கிறது. வெளியே நீர் சத்தம். துணி இரைக்க பட்டு இருக்கிறது அவளுடைய அத்தை யாரையோ கடுமையாக திட்டி கொண்டு இருக்கிறாள்.
இதற்கு என்ன அர்த்தம் என்றால் காளையில் நேரத்தில் எழுந்து வெளியே வரமுடியாதா சீக்கிரம் அடுப்பை கழுவி பாத்திரம் தேய்த்து வீட்டை வேகமாக பெருக்கி சமையலை விரைவில் முடித்து துணியை துவைத்து காயப்போடு என்று அர்த்தம் சற்று திரும்பி பார்த்தால் ஒரு பக்கெட்டில் நீர் நிறைந்து தொடைக்கும் குச்சி கண்முன் நிறுத்தப்பட்டு நிற்கிறது. அடுத்து ஓடினால் தொடைத்து முடித்ததும் அனைவருக்கு டி போடும் வேலை வந்துவிடும்.
அவள் காலையில் இருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்க வில்லை பல்லையும் துலக்க வில்லை தலையும் சீவ நேரமில்லை பைத்திக்காரி போல் பயந்துகொண்டு அங்குஇங்குமாய் அலைகிறாள்.
பின்பு தன் குழந்தையின் அழுகுரல் பின்னாலிருந்து அவள் அத்தை என்ன செய்து கொண்டிருக்கிறாய் வயிறு நிறைய ஊட்டி விட்டு வேலையை பாரு என்று கத்துகிறாள்.
தான் பெண்பிள்ளையை பெற்றடுத்தும் குற்றம் பையனாக பெற்றெடுக்கவில்லை என்று அவள் மீது கோவம் ஏனென்றால் அவள் அத்தைக்கு பெருமையாக மற்றவள் என்றும் அவளை தூக்கி வைத்து மட்டுமே பேசவேண்டும் தன்னை தாழ்த்த
ி பேசிவிடுவார்கள் என்று பயம் அதிக கௌரவ பேய் பிடித்தவர்கள்.
மாமனாரும் அதே போல் அமைதியாக அத்தை பேச்சை கேட்டு இதுதான் சரி என்று மாறிவிட்டார். தன் கணவனும் தன் அம்மா கூறுவது மட்டுமே முற்றிலும் சரி இவளுக்கு என்ன தெரியும் இது போல தான் வாழவேண்டும் என்று எவ்வளவு வலிகள் இருந்தாலும் புரிந்து கொள்ளாமல் இந்த வேலையை செய்துவிட்டு அவளை போயி சாயசொல் எவள் கேட்கிறாள் என்று அவள் அத்தை வெருப்புடன் கத்துகிறாள்.
பெண் என்பவளுக்கு ஆயிரம் வலிகள் இருக்கும் வலி எல்லாம் மறந்துவிடவேண்டும் போயி வேலையில் மட்டும் கவனம் செலுத்து எங்களுக்கு இல்லாத வலி உனக்கு இருக்கிறதா.எனக்கு செய்த ஆபரேஷன் எல்லாம் உன்னை விட பெரியது நான் செய்யவில்லையா என்று அதட்டி கூறினாள்.
வலிகளை புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் சவுக்கடி போட்டாள். உடல் நிலை என்னாவது சற்று ஓய்வு எடுத்து வேலை செய்தால் வீடு அதிர்ந்து கீளே விழுந்துவிடுமாம்.
தான் போடும் கட்டளைகள் தான் நினைத்தபடி அவள் அத்தைக்கு நடக்கவில்லை என்றால் ஆயிரம் குறை கண்டுபிடித்து அவளை திட்டி தீர்ப்பாள்.
உண்ணலாம் என்று அமர்ந்தால் அப்பொழுதுதான் அவளை அவளுடைய அத்தை அழைப்பாள் வேகமாக.
என்ன செய்து கொண்டிருக்கிறாய் அங்கே இதை எடுத்து வா அதை எடுத்து வா என் மகன் என்ன கூறுகிறான் என்று கேழு என்ன சும்மா அமர்ந்து கொண்டிருக்கிறாய்.
என்று சத்தம் போட்டு கொண்டே இருப்பாள்.
அவளுடைய குழந்தைக்கு சோறூட்டி பாலூட்டி தூங்கவைத்து அனைவரும் உணவு அருந்திய பின்பு மிச்ச மீதி இருந்தால் பொடி வைத்து உண்ண வேண்டும். பலகாரம் செய்தாலும் அதே போல் கொஞ்சம் இருந்தால் தருவார்கள். காலையில் வைத்த மிச்ச மீதி இருந்தால் இவள் தான் சாப்பிடவேண்டும் மற்றவர்கள் அறுவிருப்பாக பார்ப்பார்கள்.
புகுந்த வீட்டிற்கு வந்த பெண்ணை வேலைக்காக மட்டுமே அவளை கட்டி வைத்ததுபோல் இராவும் பகலாய் அவள் அத்தை சொற்பேச்சு மட்டுமே கேட்டு நடக்க வேண்டும்.
மீறி மாறி நடந்தால் இவளுக்கு இந்த வீட்டில் வாழும் தகுதி இல்லை. அவள் தாய் என்ன சொல்லி வளத்தாலோ தெரியவில்லை என்ன பொம்பளையோ என்று அர்ச்சனை போட்டு அவளுடைய அத்தை அவளை கண்காணித்து கொண்டே இருப்பாள்.
அவளுக்கென்ற உலகத்தை மறந்து புகுந்து வீட்டிற்காக மட்டுமே அனைத்தையும் தியாகம் செய்து தன் நிம்மதியான தூக்கம் நிம்மதியமான சாப்பாடு நிம்மதியான வாழ்க்கை இழந்து அனைத்து குணங்களையும் மாற்றி வாய் பேச விடாமல் அடக்கி தன்னை ஒரு கைதியை போல் வீட்டில் வைத்துக்கொண்டு இருப்பது நியாயமா??
அவள் செய்யும் ஒவ்வொரு வேலைகளும் அவள் சரியாகத்தான் செய்கிறாள். ஆனால் குற்றம் கண்டுபிடித்து அவளை துன்புறுத்தி அவளை துரத்தி கொண்டே இருக்கிறாள் அவளுடைய அத்தை.
பெண் என்பவள் இப்படித்தான் வாழவேண்டும் சுதந்திரமாக தன் கருத்துக்களை வெளிப்படுத்த கூடாது எது சொன்னாலும் சரி என்ற பேச்சிற்கு மறுபேச்சு பேச கூடாது. பெரியவர்கள் முன்பு பேசக்கூடாது கையை கற்றி கீழேதான் அமரவேண்டும்.
அமைதியாக இருப்பதற்கு அவள் என்ன பொம்மையா வலியோடு வேலை செய்து கொண்டு இருப்பதற்கு அவள் என்ன இயந்திரமா என்ன வாழ்கை வாழ்கிறாள் அவள்.
எதற்காக அவள் இப்படி வாழவேண்டும் தனக்கென்று எந்த உரிமைகளும் கிடையாதா புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு இதுதான் கதியா???
எப்போழுது மாறும் இந்த அடிமைத்தனம் ஒழியும் அனாதையை போல் தனிமையில் அமர்ந்து மௌனம் கொண்டு அசையாமல் சிந்தித்து கொண்டு இருக்கிறாள்.அவளுடைய டைரியில் எழுத பட்ட வரிகள் கண்ணீரோடு அவளை நின்று பார்த்து கேட்கிறது இன்று.