கோவம் ஏன் வருகிறது?
கோவம் ஏன் வருகிறது?


ஒருவரின் மீதோ
அல்லது அவர்களின் செயலின் மூலமோ
பிடிக்காத விஷயங்கள் நடந்தாலோ
தீய உணர்வுகள் மீதோ
பொறாமையினாலோ
தோல்வியினாலோ
சுயநலத்தினாலோ
துன்பம் ஏற்படும்பொழுதோ
தலைகணம் பிடித்ததாலோ
பிடித்த விஷயங்கள் நிறைவேறாதபோதோ பிடித்தது கிடைக்காதபோதோ
மனம் மிகவும் சோர்வடைந்து தூக்கி எறியும் அளவிற்கு மனம் சஞ்சலம் கொண்டு வெறுப்பை வாரி வழங்கி எரிகிறது கோவம்..
கோவம் ஏற்பட்டால் முதலில் பாதிக்கும் நபர் நீங்கள்தான்
வெறுப்பை காட்டும்போது உன் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் அதிவேகமாய் செயல்பட்டு செய்வது அறியாது தன்னையே மாய்த்து கொள்ளும்.
இதற்கு அத்தனைக்கும் மூலப்ரதானமாய் இருப்பது எதிர்பார்ப்புகள் தான். உலகிலே ஆசை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது
எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் கோவம் வருகிறது.
சூழ்நிலைகள் பலவாக இருக்கலாம் மனநிலைகள் வேறாக இருக்கலாம்
அவர்கள் நிலையில் இருந்து சற்று யோசித்து பாருங்கள்.
அதற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிகவும் அவசியம் அதை வைத்து நீங்கள் எதைவேண்டுமானாலும் சாதிக்கலாம்.
ஏன் எதற்கு இந்த கோவம்??
விட்டுகொடுங்கள் நாம் எதிலும் கெட்டுப்போவதில்லை.
மாறாக அன்பை தாருங்கள்
அனைத்தும் உன்னிடமே பலமடங்காக வந்து சேரும்.
கோவத்தை குறைத்துதான் பாருங்களே!
வாழ்க்கையில் அற்புதமாய் ஆனந்தம் நிகழும் தருணம் இது.