தனிமை
தனிமை


ஒரு அமைதியான சூழலில் அமர்ந்திருந்தேன் மனதில் எந்த விதமான யோசனையும் வரவில்லை மூளை சோர்ந்துபோய் விட்டது.
ஆயிரம் எண்ணெங்கள் குவிந்து கிடந்த இடத்தில் அமைதி நிலவியதுபோல் காணப்பட்டன. எல்லாம் நேர்ந்து முடிந்து விட்டது இனியும் வேதனைப்பட மீதமில்லை என்று தோன்றியது.
காலங்கள் எல்லா சூழ்நிலைகளுக்கும் ஒரு பதில் கூறிவிட்டுத்தான் செல்கிறது. ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் உண்மை நிலையானது என்றும் தனிமை தான் மருந்து.
சில விஷயங்களை முடிவெடுக்க முடியவில்லை என்று தோன்றினால் மற்றவர்களுடன் பகிருங்கள் யோசனை கேளுங்கள் ஆனால் சரியான முடிவுகளை தேர்ந்தெடுப்பது நீங்களாகத்தான் இருக்கவேண்டும்.
நமக்கு பிடித்த விஷயங்களில் நாம் ஈடுபடும்போது தன்னை அறியாமல் எண்ணெங்கள் மாற்றமடைந்து அதன்போக்கில் பயணத்தை தொடங்குகிறது.
நமக்கு பிடித்த விஷயங்களில் நாம் ஈடுபடும்போது தன்னை அறியாமல் எண்ணெங்கள் மாற்றமடைந்து அதன்போக்கில் பயணத்தை தொடங்குகிறது.
இதற்கு மேலும் கடந்து போக ஆயிரம் வழிகள் இருக்கிறது என வேதனைகளை மறைத்து கொண்டு மீண்டும் நடைபோட வேறுபாதையை தேர்ந்து எடுக்கிறோம். இது அனைத்தும் நமக்குளே ஏற்படும் புது விதமான மாற்றங்கள்தான்.
ஒரு அனுபவத்தை பெரும்போதுதான் அதனுடைய அர்த்தங்கள் முழுமையைாய் புரிய தோன்றுகிறது. அதன் பாதிப்புகளும் விளைவுகளும் ஒரு வழிகாட்டி பாடமாய் கண்முன் நிற்கிறது.
இன்று தனிமையோடு நிற்கும்போதுதான் தவறுகளை உணரமுடிகிறது.தனிமை தனித்துவம் வாய்ந்தது. தனிமையோடு இருந்து பழகிவிட்டால் அதைவிட நண்பகமான துணை வேறு இருக்க முடியாது.
எல்லா சூழல்களிலும் மற்றவர்களை எதிர்பார்த்து வேதனை அடைவது நம்மை நாமே காயப்படுத்திக்கொள்வது போல் ஒரு உணர்வு. உன்னை நீ நம்பினால் போதும் உன் மூளையானது மனதிற்கு கட்டளையிடும் எது சரி எது தவறு இதை செய் செய்யாதே என்று நமக்கு புரியவைத்துவிடும் மற்றவர்களை நாடும்போது மூளை எதையும் சிந்திப்பதில்லை எந்த முடிவுகளையும் எடுக்க விரும்பவதுமில்லை.
தனிமையில் அமைதியோடு இரசிக்க பாடல்கள் கேளுங்கள் பிடித்ததை செய்யுங்கள் உங்கள் விருப்பம்போல் வாழுங்கள் உங்கள் சுதந்திரம் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
தனிமையோடு இருக்க பழகுங்கள் தனியாகத்தான் பிறந்தோம் தனியாகத்தான் செல்வோம் மற்றவர்களுடன் பழகும்போது அவர்களின் நல்ல செயல்களை மட்டும் எடுத்துக்கொண்டு நீ எதை செய்தாலும் உன் செயல்கள் தனித்து தெரியவேண்டும் உனக்கென்று கோட்பாடுகளை விதித்து கொள்ளுங்கள்.
யாரை நம்பியும் செல்லாதே உன்னை நம்பு உன்னுடன் உன் நிழல் போல் தனிமை தொடரும் அதுவே நிலையானது.