பெண் உரிமை
பெண் உரிமை


கல்லூரி மாணவர்களுக்கு இடையில் கடும் போட்டி நேரிட்டது பெண்களின் உரிமை பற்றியும் அவர்களின் வலிமையும் ஆண்களுக்கு நிகரான சமத்துவத்தை பற்றி பேச கல்லூரி பெண்களுக்கு இது ஒரு வாய்ப்பு என்று நினைத்துக்கொண்டாள்.
மேடையில் சந்தியா அவள் இவ்வளவு நாட்களாக நினைத்து வருந்தியதை அப்படியே
அவள் பேச தொடங்கினாள் "தாயின் கருவிலிருந்து அவள் வெளியுலகத்தை பார்ப்பதற்குள் பெண் சிசுக்களை கொலை செய்ய துணிகிறார்கள் தொப்புல்கொடி உறவை அங்கேயே அறுக்கப்படுகிறது. மீறி வெளியே வந்து வாழும் பெண்ணை திருமணம் என்ற பெயரில் கட்டி கொடுத்து விற்றுவிடுகிறார்கள் வரதட்சணை கொடுமை தலைக்கேறி தாண்டவம் ஆடுகிறது.
அவள் குழந்தையை பெரும் பாக்கியமும் பாலூட்டும் சக்தியை பெற்றதால் அவள் உடல் மிகவும் இலகுவாக இருக்கிறது. அதை வைத்து பெண்ணின் வலிமையை இடைபோடுவது மிகவும் தவறான ஒன்று. அவள் மனதளவில் மிகவும் வலிமை வாய்ந்தவளாகவே இருக்கிறாள்.
விளையாட்டு பிள்ளையாக வளர்ந்த அந்த குழந்தை பருவமடைந்த பிறகு பல இன்னல்களை சந்திக்கிறாள்.உடல் ரீதியாக ஏற்படும் மாறுதல்கள் பல கண்ணோட்டத்தில் பொறுமையாக மனதளவில் பொறுத்துக்கொள்ள வேண்டிவருகிறது.
அவள் பெண்பிள்ளை என்பதால் பல இடங்களில் ஏன் மஹாலக்ஷ்மியாக பார்க்காமல் ஊராவீட்டிற்கு போகும் பிள்ளைதானே என்று படிப்பதை நிறுத்தி பாத்திரமும் சமையல்கட்டுமாய் நிறுத்திவிடுகிறார்கள்.
அவர்கள் எண்ணங்களை முடக்கி இதுதான் உன் வேலை காலம் முழுவதும் இதைமட்டும்தான் செய்யவேண்டும் என்று அடக்கி வீட்டிலே உக்கார வைத்து விடுகிறார்கள்.
தனக்கென்ற ஒரு சுதந்திர உரிமையை அவளிடமிருந்து பறித்துவிடுகிறார்கள்.
ஆண்கள் வேலை பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொண்டு பல கோணங்களில் தன் வாழ்க்கையை மாற்றி அமைத்து கொள்கிறார்கள் ஆனால் பெண்கள் என்றும் வீட்டை தாண்டி வெளியே வருவதற்கும் வீட்டு வேலைகளை தவிர மாற்றி வேறேதேனும் யோசித்தால் பெண்கள் குற்றவாளி கூண்டிலே நிறுத்தப்படுவதும் பேச்சிலே அந்த பெண்ணை தரம்தாழ்த்தி உனக்கு ஒன்றும் தெரியவேண்டாம் நீ வீட்டை கவனித்து பிள்ளைகளை பார்த்துக்கொள் அவ்வளவுதான் வேலை என்று சொன்னதும் இவள் தடுமாறி நிற்கிறாள்.
ஆண்கள் ஆணாதிக்கம் கொண்டு பெண்களை தாழ்வுபடுத்தி எதிர்த்து நிற்கிறார்கள்.
பெண்களின் மனதை ஆண்களுக்கு நிகராக ஏன் யோசிக்க கூடாது...??
இப்பொழுது எவ்வளவோ உரிமைகள் பெண்களுக்கென வந்துவிட்டது ஆனால் மூடத்தனமாக முன்னோர்கள் வழிநடத்தியபடி நாமும் பின்பற்றவேண்டும் என்று யோசிக்காமல் பெண்களை இழிவு படுத்தி வாழும் இந்த வாழ்க்கை இன்று வரை ஓயவில்லை என்று ஒழியுமோ இந்த அடிமைத்தனம்.
புரட்சி மிக்க சாதனை பெண்கள் உருவாகி கொண்டுதான் இருக்கிறார்கள்
பெண்கள் வேலைபார்க்கும் இடங்களில் தனக்கென்ற ஊதியத்தை ஆணுக்கு நிகராக கேட்கும் உரிமை இருக்கிறது ஆண்கள் ஏதேனும் துன்புறுத்த நேரிட்டால் காவல் துறையில் உடனே மின்னஞ்சல்கள் மூலமாகவும் புகார் செய்யும் உரிமை உள்ளது பெண்களுக்கென பல உரிமைகள் இதுபோல வழங்கப்பட்டிருக்கிறது.
பெண்கள் எதற்காகவும் பயப்பட தேவை இல்லை எதிர்த்து கேள்வி கேளுங்கள் இன்னும் ஏன் தயக்கம் கொண்டு நிற்கிறீர்கள் சுதந்திரமாக வெளியே சென்றால் தான் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் சுயநம்பிக்கை ஏற்ப்படும் வீட்டில் அடைந்துகிடப்பது போதும்.
பெண்களின் அடிமைத்தனம் ஒழிக்க படவேண்டும் பெண்களுக்கென சம உரிமை கொடுக்க படவேண்டும் ஆண்களும் பெண்களும் நிகரானவர்கள் என்று போற்றப்படவேண்டும் இனி வாழும் சமுதாயம் மாற்றப்படவேண்டும் மாற்றப்படவேண்டும்" என்று உரையை முடித்து கொண்டாள்.
அனைவரும் சற்று அமைதியாக இருந்தார்கள் தலைமை ஆசிரியர் சந்தியாவை அழைத்து நீ வாழ்வில் முன்னேறும் உதவிகளை நான் செய்கிறேன். நீயே பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கவேண்டும் என்று பாராட்டி பரிசுமடலை வழங்கினார்.