sowndari samarasam

Drama Tragedy

4.5  

sowndari samarasam

Drama Tragedy

மனித நேயமற்ற அரசு மருத்துவமனை

மனித நேயமற்ற அரசு மருத்துவமனை

8 mins
354


ஓடி ஆடி திரிந்த பெண் அவள் பெயர் சுஜாதா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அரசு வங்கியில் வேலைபார்த்து கொண்டு இருந்தாள்.


நல்ல சுற்று சூழல் நல்ல நண்பர்கள் எல்லாரிடமும் கலகலவென்று சிரித்து பேசுவாள். வேலைமுடித்தவுடன் வீடு திரும்பிவிடுவாள் அவளது வண்டியிலே பயணம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவள்.


வீட்டு வேலைகளில் அதிக கவனமில்லை கல்யாண வாழ்க்கை என்றாலே ஒரு பயம் மனதிலே குழப்பங்களோடு இருந்தாள்.

ஒரு குடும்ப பெண் என்பவள் கல்யாணம் முடித்த பின்பு தன் புகுந்த வீட்டிருக்காக தன் வாழ்க்கையை மாற்றி அமைக்க நேரிடும். தன் சுதந்திரம் முழுவதும் போய்விடும் என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.


ஒரு நாளில் அதே போல் பெண் பார்த்து திருமணமும் முடிந்துவிட்டது.

தாய் தந்தையரின் ஆதரவையும் இழந்தாள் திருமணம் முடிந்ததும் தன் கணவரே அனைத்தையும் பார்க்கவேண்டும் என்ற நெருடல் ஏற்பட்டது.


சில சமயம் கணவர் வழியாக பல பிரச்சனைகளும் ஏற்பட்டது.

ஒரு வருடத்திற்குள் குழந்தை ஆகவில்லை என்பதற்காக மாமியார் அவளது வயிற்றிலே ஏதோ கோளாறு இருக்கிறது என்று மருத்துவமனைக்கு முதல் முதலில் இதற்காக கூட்டி சென்றார்கள்.

அது ஒரு தனியார் மருத்துவமனை அங்கே சென்றதும் உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது.


ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக பணம் வசூலிக்கப்பட்டது. பரிசோதனை முடிந்ததும் மருத்துவரின் ஆலோசனைக்காக மதிய வேளை முழுவதும் காத்திருந்தார்கள். அவளுக்கு பெரிதாக எதுவுமில்லை என்றதும் மன நிறைவுடன் வீடு திரும்பினார்கள்.

அந்த பெண்ணுக்கோ வேதனை தாங்கமுடியவில்லை குழந்தை உருவாகவில்லை என்பதற்காக உடலிலே கோளாறு என்று சொல்லி இவ்வளவு சித்தரவதை செய்கிறார்களே இது என்னடா வாழ்கை என்று நினைத்து கண்கலங்கினாள்.


இரண்டு மூன்று மாதங்களுக்குள் கருவுற்றாள்.ஒவ்வொரு மாதமும் மருத்துவரிடம் செல்லும்போது கவனமாக அனைத்தையும் கேட்டு கொள்வாள்.


அதற்கு வசூலிக்க படும் பணம் கொஞ்சம் நஞ்சமல்ல.

ஆயிரம் ரூபாயை தாண்டிவிடும் ஒவ்வொரு மாதமும் அவ்வளவு மாத்திரைகள் எதற்கு எடுத்தாலும் ஊசி போட்டு விடுவார்கள்.


அடிக்கடி ஸ்கேன் செய்வார்கள் நன்றாக இருக்கும் குழந்தையை அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறதென்று ஆயிரம் வசனம் கூறுவார்கள்.


ஒரு குழந்தை ஒவ்வொரு உடலுக்கு ஏற்றது போல தானே வளரும் அதற்கும் மாத்திரைகள் சாப்பிடவேண்டும்.

நல்ல சத்தான உணவுகளை தாண்டி

வெறும் மாத்திரைகள் மூலமாகவே பல உயிர்கள் வாழ்ந்து வருகிறது.


அந்த பெண்மணி யோசித்தாள்

"எதற்கு இவ்வளவு மாத்திரைகள்..?

காலங்கள் நவீனமாக மாற மாற உடல் சோர்வுற்று மாறிவிட்டது. அனைத்தும் ஏற்று பழக வேண்டிய கட்டாயமாக உள்ளதே என்று முணுமுணுத்தாள்".


அப்படியே 5 மாதங்கள் ஆகிவிட்டது வாந்தி மயக்கம் அதிகமாகவே காணப்பட்டது. அதற்கும் மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழ்நிலை அமைந்தது.


மீண்டும் 7வது மாதம் அவளது சீமந்தத்தை முடித்துவிட்டு அம்மா வீட்டிற்கு கூட்டி சென்றார்கள்.

அங்கே "ஆரம்ப சுகாதார நிலையம்" ஒன்று உள்ளது மாதம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சென்று பரிசோதனை செய்யவேண்டும்.


பல காலங்களாக அரசு மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் அல்லது கட்டணமே இல்லாமலும் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அங்கு செல்பவருக்கு ஒரேமாதிரியான வைத்தியம் செய்யப்படும்.

பணம் அதிகம் இருப்பவர்களும் உடல் சரியாகி விட்டால் போதும் என்று நினைப்பவர்களும் தனியார்

மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் செய்வார்கள். இல்லாதவருக்கு எங்கே போவது அரசு மருத்துவமனை தானே.


அவளது தாய் தந்தையர் இவருக்கு காலம் மாறினாலும் நவீனங்கள் ஆனாலும் அரசு மருத்துவமனையில் மட்டுமே அதிக அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இருப்பார்கள் அங்கே சென்றால் மட்டுமே சுகபிரசவம் செய்து தருவார்கள். நல்ல மருந்துகள் புதிதாக வந்து இறங்கும். தனியார் மருத்துவமனையில் சேர்த்தால் சிசேரியன் செய்துவிடுவார்கள் என்று அந்த பெண்னை பயமுறுத்தி மனதிற்குள் ஆழமாக பதித்து விட்டார்கள். அதனால் அவள் சுகபிரசவம் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இருந்து விட்டாள்.


இதற்கு நேர்மறையாக எதையும் யோசிக்காத அப்பாவியாக இருந்தாள் இதை வைத்து பலரும் அவளிடம் சண்டையும் போட்டார்கள்.

முதல் பிரசவம் என்பதால் எதை பற்றியும் அவளுக்கு முழுவதுமாக தெரியாது தாய் தந்தை மட்டுமே நம்பிவிட்டாள்.


9 வது மாதம் முதல் வாரத்திலேயே ஏதோ அடிவயிற்று வலி ஏற்பட்டதால் பயந்து கொண்டு மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பார்த்தார்கள். பிரசவ நேரம் நெருங்குவதற்கு நிரைய நாட்கள் இருக்கிறது என்று அனுப்பி விட்டார்கள்.


9வது மாதம் கடைசி 31வது நாள் மார்ச் மாதம் இரவு 11மணி அளவிலேயே வயிறு வெடித்தது போல் ஒரு உணர்வு பனிக்குடம் உடைந்து விட்டது சட்டென்று.


நீர் வழிந்து கொண்டே இருக்கிறது. சிறிது நேரம் கூட நிற்கவில்லை.

அப்படியே அவளை அழைத்து கொண்டு 11.30 மணி அளவிலேயே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றதும் பனிக்குடம் நீர் மிகவும் குறைவாகவே உள்ளது இங்கே குழந்தையின் துடிப்பை பார்ப்பதற்கோ இங்கே போதிய வசதிகள் இல்லை சுகபிரசவம் மட்டுமே இங்கு செய்யப்படும்.


உடனடியாக இந்த பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் இல்லையென்றால் ஆபத்து என்று கூறிவிட்டார்கள் இவளது தந்தையும் பயந்துகொண்டு அம்புலன்சிலே தாயுடன் அனுப்பி வைத்துவிட்டார்.


கரடு முரடான பாதை அவளுக்கோ நீர் வழிகிறது உடல் மிகவும் சோர்வுற்று முடியாமல் ஆம்புலன்சில் படுத்து கொண்டு வருகிறாள்.

அரசு மருத்துவமனையை அவள்

பார்த்ததுகூட இல்லை இறங்கியதும் அவள் படபடப்புடன் செய்வது புரியாமல் எப்படியாவது தன் குழந்தையை காப்பாற்றி விடவேண்டும் என்று எந்த மருத்துவமனையாக இருந்தால் என்ன என்று நினைத்துக்கொண்டு சேர்க்கை பதித்து விட்டு மெதுவாக சென்றாள்.


அங்கு ஆயிரம் அடிப்போல் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தாள்.அங்கு பாத்ரூமில் கழிவுகளோடு இருந்தது இந்த வலியோடு குமட்டலும் ஏற்பட்டது.

அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் கூடி இருந்தனர் அந்த வார்டில் ஒரு அறையில் 20 பெட்டுக்கு மேல் இருக்கும்.


எங்கும் இடமே இல்லை அமர்வதற்கு தெருவிலே நாய் அமர்வது போல் வயிற்றிலே குழந்தையை வைத்து கொண்டு கதவின் முன்புறம் கீழ அமர்ந்திருந்தாள்.


டோக்கன் போட்டுவிட்டதும் செவிலியர் ஒருவர் அவளை அழைத்தார்கள். அந்த பெண்மணியின் ரிப்போர்ட் அனைத்தையும் பார்த்துவிட்டு அவளை பரிசோதனை செய்தார்கள் பிரசவ வலி ஏற்படுவதற்காக உள்ளே மாத்திரை வைத்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக வலி உயிரை கொன்றது ஒரிடத்தில் பெட் காலியாக இருந்தது அங்கே முடியாமல் படுத்து கொண்டு இருந்தாள்.


கொஞ்ச நேரம் கழித்து அவளை உள்ளே பிரசவ வார்டிற்குள் அழைத்தார்கள்.

அந்த அறைக்குள் புகுந்ததும் சந்தைக்கடையை போல் சுமார் ஒரு 10 படுக்கைகள் இருக்கும் அன்றிரவு முக்காவாசி பயிற்சி செவிலியர்கள் மட்டுமே அங்கு இருந்தார்கள்.

அங்குள்ள பிரசவ பெண்மணிகள் கூச்சலிட்டு கத்தி கொண்டிருந்தார்கள். குழந்தையை பெற்று எடுப்பதற்கு ஒரு கடமை செவிலியரோ ஒரு பெண்மணியின் மேல் ஏறி அமர்ந்து முக்கு முக்கு என்று கத்தி கொண்டே அடித்தாள்.

அதை கண்டதும் இவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இன்னொரு பெண்மணிக்கோ குழந்தை வெளியே தலை பாதி வந்துவிட்டது பெற்று எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாள்.

இவளுக்கு கடைசி படுக்கையிலே இடம் கிடைத்தது ரத்தம் சிந்தி கிடந்ததை பார்த்து அருமனசுடன் அங்கே சென்று ஒருவர் துடைத்ததும் படுத்துகொண்டாள்.


பயற்சி செவிலியர் ட்ரிப்ஸ் போடுவதற்கு நிரம்பிலே ஊசியை சரியாக குத்தவில்லை மீண்டும் முயற்சித்து குத்திவிட்டு ட்ரிப்ஸ் போட்டு சென்றுவிட்டாள்.

நள்ளிரவு இரண்டு மணி இருக்கும் சிறுநீர் கழிக்க கூட அனுமதி இல்லை..

இவளோ கத்தினாள் "நா எந்திருச்சு நடந்து போயிட்டு வர மெதுவா என்னையே விடமாடிரிங்கன்னு அழுததுகிட்டே கத்தறா" உடனே ஒரு செவிலியர் வந்து சிறுநீரக பையை சொருகிவிட்டு சென்றுவிட்டாள்.இவளுக்கு வலியுடன் ஆக்கிரோஷமாய் காணப்பட்டாள்.

பிரசவ வலி ஓடு இருப்பவளுக்கு சிறுநீரக பையை மாட்டிவிட்டு எழுந்து நடக்கவிடாமல் செய்வது முதல் குற்றம் அவளுடைய குழந்தையின் இதய துடிப்பு எவ்வளவு அளவில் இருக்கிறது என்று ஆய்வு செய்யும் இயந்திரமும் கோளாறு சீராக வேலை செய்யவில்லை. வலியுடன் இருப்பவளுக்கு தன் குழந்தையின் துடிப்பு சரியாக காட்டவில்லை என்றால் எப்படி இருக்கும் வேதனையை பொறுத்துக்கொள்ள மாயவில்லை.


அடுத்தநாள் தட்டு தடுமாறி கொண்டே பொழுதும் விடிந்தது இரவு முழுவதும் பிரசவ வலி ஓடு துடித்து கொண்டு இருந்தாள் வேறு மருத்துவமனை மாற்றுவதற்கு இவர் தந்தையிடம் போராடினார்கள்.

இங்கே மட்டும்தான் அனுபவ செவிலியர்கள் மற்றும் நல்ல மருந்துகள் இருக்கும் என்று விடாப்பிடியாக மறுத்துவிட்டார்.

இவளோ வேதனையில் தத்தளித்து கொண்டு இருக்கிறாள்.


கடைசி ட்ரிப்ஸ் போட வந்த பயற்சி செவிலியர் மாற்றி பழைய ட்ரிப்ஸ் திரும்பவும் போட்டு சென்று விட்டாள்.

இன்னொரு மருத்துவ பெண்மணி கத்திகொண்டே உள்ளே வந்தாள் "என்ன பழைய ட்ரிப்ஸ் போட்டு இருக்கிறாய் இவளுக்கு என்று சொல்லியும் சொல்லலாமலும் மறைத்துவிட்டு கொஞ்ச நேரம் பாருங்க இல்லைனா சிசேரியன் வார்டுக்கு கூட்டிட்டு போங்க இவள ட்ரெஸ்ஸிங் பண்ணி என்று கோபத்துடன் கத்தி கொண்டே சென்றுவிட்டாள்" பயற்சி செவிலியரிடம்.


அன்று புது வருட பிறப்பு அந்த வார்டிலே அனைவரும் குழந்தையை பெற்று எடுத்து சென்று விட்டார்கள். இவள் மட்டும் அனாதையாய் போல் கடைசி படுக்கையிலே பிரசவ வலி ஓடு கிடந்தாள்.


மருத்துவ பெண்மணி வந்து பரிசோதனை செய்துவிட்டு குழந்தை தலை திரும்பவே இல்லை உங்களுக்கு சிசேரியன் செய்யப்பட நேரிடும் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் தகவல் சொல்லுங்கள் என்று கூறிவிட்டாள்.

அவளால் எழுந்து நிற்க கூட முடியவில்லை பிரசவ வலி அதிகமாகி விட்டது. ஆனால் அவளுக்கு சிசேரியன் செய்ய முடிவு செய்து விட்டார்கள். தள்ளு வண்டி கூட எடுத்து வரவில்லை நடக்கமுடியாமல் அழுதுகொண்டே அவளை குளிக்க வைத்து ட்ரெஸ்ஸிங் செய்யும் தருணத்திலேயே பொறுத்துக்கொள்ள முடியாத வலியும் ஏற்பட்டது. சொன்னால் யாரும் புரிந்து கொள்ளவுமில்லையஅவளுடைய ஜடையும் நிற்கவில்லை அந்த தருணத்திலேயே.

ஆயிரம் குழப்பங்களும் வேதனையும் நிறைந்திருந்தது.


தன் கணவரும் ஊரிலிருந்து வரவில்லை அவரிடம் சிசேரியன் செய்வதற்கு கேட்கவும் இல்லை. தாய்க்கும் சேய்க்கும் ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வது என்று கூறிவிட்டு அவசர அவசரமாக கையெழுத்தை அவளிடம் வாங்கினார்கள் அவளால் ஒக்காரவும் முடியவில்லை.


திரும்பவும் மருத்தவ பெண்மணி குழந்தை திரும்பி விட்டதா என்று பரிசோதிக்கவுமில்லை அப்படியே அவளை அழைத்து கொண்டு சிசேரியன் வார்டுக்கு கூட்டி செல்கிறார்கள்.


கூட்டி செல்பவருக்கு பணம் தரவில்லை என்று சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

அவளோ வலியில் துடித்து கொண்டு இருக்கிறாள்.


சிசேரியன் வார்டிற்கு சென்றதும் அவள் பிரசவ வலியோடு ஒரு குழந்தை போல் குனியவைத்து மருத்துபோகின்ற ஊசியை முதுகில் ஏற்றினார்கள். இரண்டு புறமும் மாற்றி மாற்றி ட்ரிப்ஸ் போடுகிறார்கள் இவளோ முடியவில்லை வலிக்கிறது என்று கத்துகிறாள்.


"அவர்களோ மனதாவிமானமே இல்லாமல் இவளை திட்டிக்கொண்டு அமைதியாக படுக்கிறாயா இல்லையா என்று கத்தி திட்டினார்கள்" வயிற்றை அறுத்தது கூட அவளுக்கு நன்றாக தெரிகிறது உணர்ச்சி இல்லை.


ஆனால் தனக்கு சுக பிரசவம் ஆகவில்லையே என்ற வேதனை மட்டும் மனதில் முழுவதுமாய் கொண்டு ஆக்ரோஷத்திலே இருந்தாள்.


அப்பொழுது புதுவருட பிறப்பிற்காக மருத்துவ பெண்மணிகள் மாரி மாரி கையை குலுக்கி கொள்கிறார்கள்.

அதிலே ஒரு மருத்துவ பெண்மணி கூறுகிறாள்

"இவளை எதுக்கு இங்க தூக்கிட்டு வந்தாங்க 10 நிமிஷத்துல சுக பிரசவம் ஆயிருக்கு எல்லா இவ நேரம் என்று கத்தி கொண்டே குழந்தை எடுத்துவிட்டு தையல் போட்டு கொண்டிருக்கிறாள்"


இவளுக்கு பிரசவ வார்டிலாவது பரிசோதித்து சிசேரியன் வார்டிற்கு அனுப்பி இருக்கவேண்டும் அதையும் அவர்கள் செய்யவில்லை. குழந்தையை எடுப்பதற்கு முன்பாவது ஒருமுறை சோதித்து இருக்க வேண்டும் அதையும் செய்யவில்லை.

இந்த ஒரு மோசமான சூழ்நிலையில் அந்த மருத்தவ பெண்மணி கையை குலுக்கி கொண்டு இருக்கிறாள்.இவளுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருந்திருக்கும் அந்த தருணத்தில் இது விதியா சதியா அலட்சியமா.


அரசு மருத்துவமனையில் நன்றாக மருத்துவம் செய்வார்கள் என்று நம்பி வருபவர்களுக்கு என்ன நிலமை இது.

சிசேரியன் செய்து முடித்தது மயக்கமே வரவில்லை அவளுக்கு மனசு முழுவதும் கொந்தளித்து கொண்டு இருந்தது இத்தனையும் சகித்து கொண்டு எப்படியாவது குணம் அடைந்து சென்று விடவேண்டும் என்று பயத்திலே தடுமாறி இருந்தாள். அவளது உடம்பில் உணர்ச்சி சுத்தமாக இல்லை அவளை அவளுக்கான படுக்கையிலே உடல் முழுவதும் துணியை சுற்றி கொண்டுவந்து

போட்டார்கள்.


ஜன்னி வந்துவிட்டது சிசேரியன் வார்டில் அளவுக்கு அதிகமான ஏ.சி போட்டு விட்டார்கள் கொஞ்சம் கூட குறைக்கவில்லை..


அந்த வேதனை போததென்று இதுவும் ஒரு வேதனை செயல். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை படுக்கையை வேர இடத்திற்கு மாற்றி விடுவார்கள். 5நாட்கள் ஏதோ சுமாராக சென்று கொண்டு இருந்தது.


20 படுக்கைகள் இருக்கும் இடத்திலே ஆண்கள் இருந்தாலும் தன் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் திரையும் இல்லை. ஒவ்வொரு படுக்கை சுற்றியும் சந்தைக்கடையை போல் நிற்பார்கள்.

6வது நாளிலே பெரிய குண்டாக தூக்கி போட்டார்கள். பழைய வார்டிற்கு போகவேண்டும் 9நாட்கள் வரை அங்குதான் இருக்கவேண்டும் தையல் பிரித்தவுடன் வீடு திரும்பலாம் என்று கூறினார்கள்.


அதுவோ பாலடைந்த கட்டிடம் துர்நாற்றம் அதிகமாகவே வீசியது அந்த வார்டிலே 20படுக்கைகளுக்கு மேற்பட்டு இருந்தது தட்டு தடுமாறி ஒரு படுக்கை கிடைத்தது அங்கு காற்றும் வரவில்லை சூடான காற்றே வீசியது. அங்கு கழிவரையோ ரயிலில் கம்பியை பிடித்து செல்லும் கழிவறை போல வடிவமைக்க பட்டிருந்தது கதவும் இல்லை.


20 பேருக்கும் சேத்தி 3 கழிவறைகள் மட்டுமே இருந்தது குளியல் அறை கிடையாது வெளியாகவே நின்று சுத்தம் செய்து துணி மாற்றி கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு நாளும் மருத்தவ பெண்மணி காலை வேலையில் தையல் கூடி விட்டதா என்று பரிசோதித்து செல்வாள்.


8வது நாள் அன்று அவளின் தையலை அழுத்தியதும் வலி பொறுக்க முடியாமல் கத்தினாள் தையல் கூடாமல் சீல் பிடித்து விட்டது.

அந்த நிமிடமே ட்ரிப்ஸ் ஊசி அனைத்தையும் மாற்றி அமைக்க உத்தரவிட்டாள் அந்த மருத்தவ பெண்மணி.


ஆனால் அந்த செவிலியரோ சீல் பரிசோதிக்க எடுத்து சென்று விட்டு 3 நாட்கள் ஆனது. அதற்கான மாற்று மருந்தை தரவே இல்லை. இவளுக்கு அதிகமாக சீல் பிடித்து மோசமான நிலைக்கு வந்தது.

அடுத்தநாள் ஒரு மருத்துவ பெண்மணி வந்தாள். இவளை ஒரு அறைக்கு அழைத்துக்கொண்டு


"தையிலே கூடல பிச்சு எறியவேண்டிதான இன்னோ ஏன் வெச்சிருக்கீங்கன்னு கத்திகொண்டே"

தையலை இழுத்து எடுத்தாள் ரத்தம் வழிந்தது வலி தாங்காமல் கத்தி கதறினாள்.


அந்த மருத்துவ பெண்மணியோ "ஏன் கத்தற பல்ல கடிச்சிட்டு பொறுத்துக்க முடியாதா கால ஏன் ஆற்ற அப்போ மட்டும் இனிச்சிதா என்று காலிலே அடித்தாள்" ஒரு ப்லாஸ்டர் எடுத்து அழுத்தி போட்டு விட்டு சென்றுவிட்டாள்.


இவளுடன் சிசேரியன் செய்த பெண்கள்

எல்லாரும் தையல் பிரித்தவுடன் கிளம்பி விட்டார்கள் வீட்டிற்கு.

இவள் மட்டும் வலி வேதனையை பொறுத்து கொள்ள முடியாமல் ஒரு பக்கம் சிசேரியன் செய்து இப்படி கிடக்கிரோமே என்ற கோவமும் இவர்கள் மனிதாவிமானமே இல்லாத மருத்துவராக எதற்கு இங்கே வேலைபார்க்கிறார்கள் என்று குமரிக்கொண்டே சென்றாள் அவள் படுக்கை இடத்தற்கு.


11ம் நாளிலே இவளுடைய பிறந்த நாள் அன்று அங்கே அனாதையை போல கிடந்தாள் அன்று தன் வயிற்றில் உள்ள புண்ணிற்கு பிளாஸ்டர் போடவும் ஆள் இல்லை.

தோலெல்லாம் திருந்தவாக்கிலே எரிச்சலுடன் வலி தாங்கமுடியாமல் தவித்தாள்.


மறுநாள் ஒருத்தி வேலை செய்பவளுக்கு பணத்தை கொடுத்து சரியாக பிளாஸ்டர் போட்டு விட சொன்னாள்.


மறுநாளும் போடா எவளும் வரவில்லை அதே வலியுடன் இரவு குழந்தையை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு கழிவறைக்கு நடந்து போகும் தூரமோ 5நிமிடங்கள் ஆகும். குழைந்தை என்ன செய்கிறதோ என்ற வேதனை ஒரு பக்கம் இவளுடைய தாயும் சரியான கவனிப்பில்லை எப்பொழுது சரியாகி வீட்டிற்கு செல்வோம் என்ற வேதனை ஒருபுறம் கழிவறை சுத்தமில்லாமல் கதவும் இல்லை அங்கே குப்பை தொட்டி உடன் சாப்பாட்டையும் அங்கேயே கொட்டி வைத்திருக்கிறார்கள்.


எங்கே போயி சொல்வது காலில் அணிவதற்கு செருப்பும் இல்லை நடுக்காட்டிலே தவிக்கும் தனிமரமாய் நின்றாள் எவ்வளவு வேதனைக்குரிய நிலமை.


வயிற்றிலே காயம் ஒரு துளி கூட ஆறவில்லை பொங்கல் திருநாளே வந்துவிட்டது படுக்கையோடு கிடக்கிறாள்.


இரவும் மட்டுமே கடமை செவிலியர்கள் வருவார்கள் மற்ற நேரம் எல்லாம் பயற்சி செவிலியர்கள் தான்.


உயிருடன் விளையாட்டு அலட்சியம் நிரம்பிலே கண்முண்ணே மாற்றி மாற்றி ஊசியை ஏற்றுகிறாள்.இரண்டு கைகளில் உள்ள அனைத்து நிரம்புகளும் ரத்தம் தேங்கி நின்றது வலியும் அதிகமாகவே இருந்தது. தப்பாக ஊசி போட்ட இடத்தில் வீங்கி போயி நின்றது அதற்கு தனி மருந்து என்ன கொடுமை இது.


இதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் தன் தந்தையாரை திட்டி எப்படியாவது வேறு மருத்துவமனைக்கு மாற்றி கூட்டி செல்லுங்கள் என்று கத்தி ஊரை கூட்டி அங்கு இருந்த தலைமை செவிலியர் குணம் அடையாமல் விடமாட்டோம் என்று கூறியே இவ்வளவு நாட்கள் அங்கையே இருக்க வைத்து விட்டாள். இனிமேல் ஒரு நொடிப்பொழுதும் இருக்க மாட்டேன் என்று உடனடியாக வெளியேறினாள்.


எப்படியோ அங்கு இருந்து சென்று வேறு தனியார் மருத்துவமனையில் சேர்த்து 4வது நாளிலே மீண்டும் தையல் போட்டு 8நாட்களுக்கு மேல் வைத்து வீட்டிற்கு செல்லும்பொழுது அவளின் வேதனையை யோசித்து பார்த்தால் மறு ஜென்மம் எடுத்தது போல் இருந்தது.


20 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்ட விதி மனிதநேயம் இல்லாத மருத்துவ பெண்மணிகள், அலட்சியமான பயற்சி செவிலியர்கள், பழுதடைந்த இயந்திரங்கள்,பொறுப்பில்லாத வேலைக்காரர்கள், மோசமான சுற்றுசூழல், பாழடைந்த கட்டிடம், எவ்வளவு ஊசி மாற்று மருந்திற்கான தாமதம், உயிரை நேசிக்காத மனிதர்கள் இன்றும் எத்தனை பெண்மணிகள் அந்த அரசு மருத்துவமனையில் கஷ்டப்பட போகிறார்களோ தெரியவில்லை என்று அழுது கொண்டே தன் குழந்தையை எடுத்து மார்பிலே அணைத்து கொண்டே சென்றாள்.


Rate this content
Log in

Similar tamil story from Drama