STORYMIRROR

sowndari samarasam

Abstract

4  

sowndari samarasam

Abstract

காதலின் ஆழம்

காதலின் ஆழம்

1 min
23.4K

காதலர்கள் ஒருவரை ஒருவர் பிரியும்போதுதான் காதலின் ஆழத்தை புரிந்துகொள்கிறார்கள்.

பிரிவின் வலிகள் தன்னை சுற்றி நடந்த நினைவுகள் சிரித்து பேசியது கண்களால் பார்த்து முதல் தடவையாக அவளை ரசித்தது இவ்வளவு நாட்களை வீணடித்து விட்டேனே.


இன்றுதான் என் வாழ்வில் பொன்வசந்தமாய் தெரிகிறது உன்னை பார்த்தவுடன்.

உன்னுடைய பேச்சுகளில் கிடைத்த உத்வேகம் சந்தோசம் காதல் கண்ணீர் அனைத்திலும் நீயே பகிர்ந்து கொண்டாய்.


எனக்கு பல சந்தர்ப்பங்களில் என்னை தோல் தூக்கி நிறுத்தியது நீயே.

நீ என் வாழ்வில் வந்த பொக்கிஷமாய் தெரிகிறாய் இன்று உன்னை காண கண்கள் தேடுகிறது எங்கு தேடியும் உன்னை காணவில்லை உன்னை இழந்த பிறகுதான் தெரிகிறது. நீ என்னுளே எவ்வளவு ஆழமாய் புதைந்து நிற்கிறாய் என்று.


உன்னை நினைக்காமல் ஒரு நொடியும் இருக்கமுடியவில்லை. உன் நினைவுகளோடு வாழ்கிறேன் இன்று. நீ எவ்வளவு தூரம் கடல் கடந்து சென்றாலும் உன்னோடு ஒரு வார்த்தை பேசினால் போதும் உலகத்தையே வாங்கிவிடுவேன்.


என்னை விட சந்தோசத்தின் உச்சத்திற்கு செல்ல எவனாலும் முடியாது நீ என்றும் கடைசி மூச்சுவரை எனது வாழ்வில் வேண்டும் என்று மனம் திரும்ப திரும்ப உன் பேரை கூறி கொண்டிருக்கிறது.


உன்னைவிட பெரிதாய் எனக்கு எதுவும் தெரியவில்லை நீயின்றி பைத்தியம் பிடித்தது போல் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டு இருக்கிறேன் என்மேல் தலை சாய்த்துக்கொள். உன் இரு கரம் பிடிக்க நான் தவிக்கிறேன் உன்னோடு பயணங்கள் தொடர என்றும் உனக்காகவே இந்த இதயம் காத்திருக்கும்.


ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar tamil story from Abstract