sowndari samarasam

Romance

3  

sowndari samarasam

Romance

கண்டதும் காதலே

கண்டதும் காதலே

5 mins
2.1K


பள்ளிக்கூடத்தில 12 வது வகுப்பு கணித ஆசிரியர் செல்வலட்சுமி பாடம் எடுதிட்டு இருந்தாங்க. வகுப்புஅறைல தீடிர்னு பாலா என்ந்திரிச்சு நில்லு இதுக்கு என்ன பதில்வரும் சொல்லு பாக்கலாம் என்று கேட்டதும் திரு திருனு முழிச்சிட்டே ஓர கண்ணுல கிருஷ்ணாவ பார்த்து டேய் இதுக்கு என்னடா பதில்வரும் உனக்கு தெரியுமாடானு முணுமுணுன்னு கேட்டதும் கிருஷ்ணாவையும் எந்திரிக்க சொல்ட்டாங்க இரண்டு பேரு கைகட்டியபடி சிறுச்சிட்டே நின்னுட்டு இருந்தாங்க..

பாலா, சார்லஸ், கிரிஷ்ணா இவங்களா ஒரே பென்ச் நண்பர்கள். கீர்த்தி, சௌமியா, வினோ இவங்க எதிர் பென்ச் நண்பர்கள். இவங்களா எப்பவும் ஒண்ணாதா சுத்திட்டு இருப்பாங்க. எப்பவும் மத்திய உணவுக்கு ஒட்டுக்காதா சேர்ந்து சாப்பிடுவாங்க. பாலாக்கு சௌமியாவ ரொம்ப புடிக்கும் பாலா வீட்டுக்கு இரண்டு வீதி தள்ளிதா சௌமியா வீடு இருக்கு. எப்பவும் ஏதாச்சு சந்தேகம் இருந்தா நோட்ஸ் எடுக்க பாலா வீட்டுக்கு சௌமியா போவா. அவனோட அக்கா கிட்ட அடிக்கடி பாலா பத்தி ஏதாச்சு சொல்லிட்டே இருப்பா.பாலா இவ பேசறதெல்லா பாத்தும் பக்காத மாதிரி இரசிப்பான்..

ஒருநாள் எப்பவும் போல வகுப்பு நடந்திட்டு இருந்திச்சு திடீர்னு ஒரு மெல்லிசையான குரல் பின்னாடி

"பாலா நான் இடம் மாறிட்டே இனிமே இங்கதா ஒக்காருவேன்னு" சௌமியா சொன்னா.ஏன் திடிர்னு இந்த பெஞ்சுக்கு மாறிட்டன்னு கேட்டான்.அவ சிரிச்சுட்டே ஒன்னுமில்ல சும்மாதான்னு சொல்டா.

சௌமியாக்கு பாலா பன்ற சின்ன சின்ன விஷயம் எல்லாமே திருட்டுத்தனமாக இரசிப்பாள்..ஆய்வக நேரத்துல ஒண்ணாத வேல செய்வாங்க.

பாலா எப்பவும் ரெகார்ட் நோட் சௌமியா கிட்டதா எழுத கொடுத்து விடுவான்..சைக்கிள் எடுத்திட்டு சௌமியா வீட்டுக்கு தள்ளிட்டு கெத்தா வெள்ளை டீஷர்ட் ஜீன்லா போட்டு அவளை சைட் அடிகரக்காகவே வருவான்..இவளும் ஓர கண்ணுல பார்த்து இரசிப்பாள். அவனுக்கு அப்படியே ஜிவ்வுன்னு மின்னலடிச்சமரி உள்ளுக்குள்ள ஏறும் தலைய ஆட்டிட்டு சிறுச்சிட்டே மெதுவா போய்டுவான்..

ஞாயிறு வேலைல பாலா,கிருஷ்ணா இரண்டு பேரும் கிணத்துல மீன் பிடிக்கறதுக்கு போவாங்க. பாலா நல்லா நீச்சலடிப்பா அத பாக்கறதுக்காகவே சௌமியாவும் வினோவும் ஞாயிறுகாக காத்திட்டு இருப்பாங்க. இரண்டு பேரும் ஒண்ணாதா நடந்துபோவாங்க சாய்ங்காலநேரத்துல.

அடிக்கடி சார்லஸ் மாதா கோவிலுக்கு கூட்டிட்டு போவான் பாலா அப்பம் சாப்படறக்குனே போவான் அங்க. உண்டுவில்லு அடிக்கிறது பட்டாம்பூச்சி பிடிக்கிறது பஞ்சுமிட்டாய் ஐஸ்கிரீம் வங்கிசாப்பிடறது.நல்லா ஊரு சுத்துவாங்க இவங்க எல்லாரும் எப்பவுமே பள்ளிக்கூடத்த விட்டு வரும்போதெல்லாம் சைக்கிள் ரேஸ் வைப்பாங்க நல்லா மகிழ்ச்சியா இருப்பாங்க.சௌமியா பாலா இரண்டு பேருக்கு காதல் உணர்வு உள்ளுக்குள்ள இருந்துச்சு ஆனா வெளிய சொல்லிக்கல..

கடைசியா பொதுத் தேர்வு நெருங்கிடுச்சு ரொம்ப தீவிரமாக படுச்சு தேர்வில் தேர்ச்சி பெற்று விடுமுறைல சௌமியா ஊருக்கு போய்விட்டாள். பாலானால அவள பாக்காம இருக்கவே முடியல. எப்படா அவ வருவான்னு காத்துக்கிட்டே இருந்தான்..அவ வீட்டு வழியா எப்ப பாத்தாலும் வந்து பாத்துட்டு போவான்.

திரும்பவும் கல்லூரிக்கு ஒண்ணாதா ஒரே துரைல சேர்ந்தாங்க. அவள எப்பவும் ஜடைல பாத்திட்டு தளர்வான முடில முதல் தடவை பாக்கரப்ப கண்மைலா போட்டுட்டு, சிவப்பு மஞ்சள் ஆடை, தொங்கட்டான் கம்மல் போட்டு ரொம்ப அழகா இருந்தா பாத்ததும் உடம்புல சில்லுனு காத்தடிச்சமாதிரி இருந்திச்சு. தொண்டைகுழிலா வறண்டு போயி வார்த்தையே வரல பாலாக்கு..

"சௌமியா எப்படி இருக்க உன்னை பார்த்து எவளோ நாளாச்சு அப்படியே ஆளே மாறிட்ட பயங்கரமா இருக்கேன்னு" அவளை பாா்த்து சொன்னான்.

இவ அப்படியே காட்டுமல்லி பூத்தமாரி சிறுச்சா அவன் மெய் மறந்து பாத்திட்டு இருந்தா..அவனுக்குள்ள அளவு கடந்த சந்தோசம் தாங்கமுடில அவன் கல்லூரிக்கு சேரும்போதுதான் FZ பைக் வாங்கினான். அந்த பைக் சௌமியாக்கு ரொம்ப புடிக்கும் உற்சாகத்தோட பார்த்து இரசித்தாள்..


எப்பவும் போல வழக்கமான வகுப்பு போயிட்டு இருந்திச்சு முதல்வருட கடைசி செமஸ்டர்க்கு படு்ச்சிட்டு இருக்கப்ப ஒருநாள் சௌமியா டிபன் பாக்ஸ் பாலா கிட்ட கொடுத்தாள்.


"உடனே பாலா என்ன இதுனு ஆச்சர்யமா கேட்டான்".


உடனே "இது நான்தா செஞ்ச உனக்கு புடிக்குமேனு சப்பாத்தியும் தக்காளி தொக்கு கொண்டு வந்தேன்னு" சொன்னாள்.அவனோட வாடி போன முகம் திடிர்னு பல்பு போட்ட மாதிரி சிரித்தான்..

எனக்கு என்ன புடிக்கும்னுலா ஞாபகம் வெச்சிருக்கானு செம சந்தோசமா இருந்தான்..அடிக்கடி கேன்டீன் ஹோட்டல்க்குலா சாப்பிட ஒன்னாதா போவாங்க. எப்பவும் பாலா சௌமியாவ பாத்தாலும் புதுசா பாக்கிரமாதிரியே இருக்கும். ஒவ்வொரு தடவையும் இவள கொஞ்ச நேரம் வகுப்பில பாக்கலனாலும் மனசு முழுவதும் அவளதா தேடும் ரொம்ப காதலிச்சான்.

வாழ்க்கைல அவனுக்கு அவ எவளோ முக்கியமானவனு புரியவைக்க நிறைய முயற்சி பண்ணிகிட்டே இருந்தான். அப்படியே ஒரு வருஷம் ஓடிருச்சு அடிக்கடி ஏதாச்சு செஞ்சு ஈர்க்கர மாதிரி செஞ்சிட்டே இருப்பான்.அவளுக்கு என்ன புடிக்கும் புடிக்காது எல்லாமே தெருஞ்சிகிட்டா அவளுக்கு என்னலா புடிக்குமோ அது எல்லாமே இவனும் இரசிக்க ஆரம்பிச்சான்..

இரண்டாம் வருடத்துல இருந்து போன்ல அடிக்கடி பேசிப்பாங்க.இரவு தூங்கிறப்ப நிலாவ பாத்தா அப்படியே சௌமியா மாரியே தெரியும் சுத்தி இருக்கற நட்சித்திரமெல்லா அவளுக்காகவே கூட்டம் கூட்டமா வந்தமாதிரி தோனும். அவனுக்கு எல்லா இடத்துலயும் அவ இருக்கறமாரியே உணர்ந்தான்.எப்டியாச்சு இவளுக்கு காதல சொல்லிரனு நினச்சிட்டே இருந்தான்..

ஒருநாள் வேற காலேஜ்க்கு பேப்பர் பிரசன்டேசன் பன்றக்காக இரண்டு பேரும் தனியா போனாங்க. முடிச்சிட்டு திரும்ப வரப்ப சௌமியா பஸ் விட்டுட்டா. பாலா அத பார்த்துட்டு அவன் பைக்ல சௌமியாவ முதல் தடவ கூட்டிட்டு போறா சந்தோஷத்துக்கு அளவே இல்ல ஏறி உக்காறப்பவே பக்கு பக்குனு இதயம் வேகமா துடிக்குது. அவனுக்கு கனவா நிஜமானே தெரியல காத்துல மிதக்கறமாதிரி ஒரு உணர்வு.அப்போன்னு பாத்து என்னிக்கும் பெய்யாத மழை பயங்கரமா வருது சௌமியா குளிர்ல நடுங்க பாலா ஓட சட்டைய இறுக்கி புடிச்சிகிட்டா. அப்படியே அவனுக்கு தூக்கி வாரி போட்டுருச்சு மனசு முழுக்க சௌமியா மட்டும்தா இருந்தா. இரவு ரொம்ப தாமதம் ஆனதுனால ஹோட்டல போயி சிக்கன் பிரியாணி சாப்பிட்டு கெளம்பி வீட்டுக்கு போயி விட்டுட்டான்.

இரவு முழுவதும் துாக்கமே வர்ல கனவு மாதிரி இருந்திச்சு கொற்ற மழைல அதுவும் சௌமியா கூட வந்தன்ணு துள்ளி குதுச்சிட்டு இருந்தா எப்டியாச்சும் காதலை சொல்லிரனுனு துடியா துடுச்சான். பிப்ரவரி 14 அப்போ சொல்லிரலாம் கண்டிப்பானு முடிவு எடுத்தான். அதேநேரம் சௌமியாக்கும் இரவு முழுதும் தூக்கமே இல்ல நான் நினைக்கறமாதிரி அவனும் நினைப்பானான்னு கனவுலயே பாலாவ நினச்சு சிரிச்சிட்டு இருந்தா..


செமஸ்டர் அப்பதாத முடிஞ்சிது…காதல சொல்ற அந்த நாளுக்காக தவம் கிடந்தான்.

காதல் வரிகள் எழுதி குடுக்கலாம்னு எழுதுனா…

“உன்னை கண்ட நொடியிலே காதல் வந்தது.. உன் கண் இமை விழியிலே எட்டி பார்த்தது..

உன் கூந்தலின் மடியிலே சிக்கி தவித்தது..

உன்னை இரசிக்க இரசிக்க இதய துடிப்பும் மின்னல் போல அடித்தது...

தென்றலின் வேகத்தில் மரங்களும் ஆட காற்றிலே மழை துளி சாரலும் வீச நீயும் நானும் ஒன்றாய் போக உன் கைவிரல் பிடிக்க மனமோ தவிக்குதடி” னு கதை வசனம்லா போட்டு ஒரு கடிதம் எழுதி அவனோட புத்தகத்துக்குள்ள வச்சிட்டா..


சௌமியாவும் அவன் நடந்துகிட்டதுலா வச்சு பாலாவும் காதலிக்கிறான்னு தெருஞ்சுகிட்டா. இவளுக்கு அவன் மேல பயங்கரமான காதல் அவனுக்காக காதல் பரிசு வாங்கி வச்சிருந்தா.


அதுக்குள்ள பிரியாவிடை விழா வந்திருச்சு சௌமியா சாரில அப்படியே நடந்து வந்தா அவன் கண்ணுக்கு தேவதை மாதிரி தெருஞ்சா. உள்ளுக்குள்ள இதய துடிப்பு தாறு மாறா ஓடுச்சு இவனுக்கு ஒன்னுமே புரியல அப்டியே பட்டாம்பூச்சி பறந்தது அவனசுத்தி, எவ்வளவு அழகா இருக்கான்னு வர்ணிச்சிட்டு இருந்தான்..அவனும் வேஷ்டி சட்டைலா போட்டு சந்தனம்லா வெச்சிட்டு கைல பிரேஸ்லெட் போட்டு செம கெத்தா வந்திருந்தான்.

சௌமியா அந்த விழாவுல வசீகரா பாட்டு பாடிட்டு இருந்தா..

"வசீகரா என் நெஞ்சினிக்க

உன் பொன் மடியில் தூங்கினால் போதும்

அதே கணம் என் கண்ணுறங்கா

முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்" அப்படியே இவனுக்காக பாடுனமாதிரி மெய் மறந்து கேட்டுட்டு இருந்தான். பாலா மேடைல குழு நடனம் ஆடுனது பார்த்து இவளும் கண்ணெடுக்காம இரசிச்சுட்டு இருந்தாள்.சௌமியாவும் செமையா சைட் அடிச்சிட்டு இருந்தா அவன் பைக்ல போறப்ப பாத்தும் பக்காதமாதிரி.

சில மாதங்களுக்கு பிறகு கல்லூரில நேர்முக தேர்வு வச்சாங்க. அதுல பாலா தேர்வு செய்யப்பட்டு பெங்களூருல IT கம்பெனில வேலை கிடச்சிருச்சு. அப்படியே கொஞ்ச நாட்கள் போயிட்டு இருந்திச்சு திடீர்னு ஒருநாள் கீர்த்திக்கு கல்யாணம் முடிவு பன்னதா தகவல் வந்தது.


பள்ளி நண்பர்களோட தஞ்சாவூர் சேர்ந்து போர சூழல் ஏற்பட்டது. ரயில் பயணத்துக்காக பாலா, சார்லஸ்,கிருஷ்ணா,வினோ,சௌமியா எல்லாரும் ரயிலுக்கு காத்திட்டு இருந்தாங்க. பாலாவுக்கு சௌமியாக்கு மேல் பர்த்து கிடச்சுது இரண்டு பேத்துக்குமே உள்ளுக்குள்ள அவளோ சந்தோசம். சௌமியா கூட அதுவும் இரவு பயணமான்னு நம்பவே முடியல.அவன் கொண்டு வந்த பை கட்டிபுடிச்சிட்டு சௌமியாவ பாத்திட்டே படுத்திருந்தான்.

சௌமியாக்கு செம சந்தோசம் பாலா கூடவே இருக்கானு கொஞ்ச நாட்கள பெங்களூரு போயிருவானு கஷ்டத்த நினச்சிட்டு படுத்திருந்தா. காதல சொல்லாமையே போய்டுவானோன்னு நிறைய யோசிச்சிட்டு இருந்தாள். அவளுக்கு சரியாய் தூக்கமில்லை தஞ்சாவூர் அடுத்த நாள் சாயிங்காலம் போய்ட்டாங்க. ஹோட்டல அறைகள் முன்பதிவு செஞ்சுருதாங்க. இரவு அங்க தூங்கிட்டு விடிய காலைல எந்திருச்சு கல்யாணத்துக்கு கிளம்பிட்டாங்க. கீர்த்தி கல்யாணமும் முடிந்தது.

பாலா எப்படியாச்சும் காதல சொல்லிரனும்னு தவிச்சிட்டு இருந்தான். சௌமியாக்கு அவன் சொல்லாமலே போயிருவானோனு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. தஞ்சை பெரியகோவில் போயி சுத்திப்பாத்திட்டு திரும்ப ரயிலுக்கு கிளம்பிட்டாங்க.

திரும்பவும் மூணு நாட்கள்ல காதல் தினம் வந்திருச்சு சௌமியாகிட்ட கல்லூரிலயே காதல சொல்லிரனும்னு காதல் கடிதமும் ரோஜா பூவையும் வச்சிட்டு காத்திட்டு இருந்தான். இவளும் காதல் பரிசு எடுத்திட்டு கல்லூரிக்கு வந்திருந்தாள். அப்படியே மெதுவா வந்து சௌம்யானு கூப்பிடவும் இவ அதிர்ச்சி ஆய்டா.

கைல இருக்க கடிதத்தையும் பூவையும் கொடுத்துவிட்டு....


"சௌமியா நீ இல்லாம என்னால இருக்கவே முடில உன்கிட்ட பேசிட்டே இருக்கனு தோனுது, உன்ன பாத்து ரசிச்சிட்டே இருக்கனு, உன்கூடவே வாழனு தோணுதுன்னு உணர்வு பூர்வமா தன் காதல வெளிப்படுத்தினான்".

நீ என் வாழ்கைல வந்த பெரிய பொக்கிஷமா நினைக்கிற உன்னை அவளோ காதலிக்கிற செளமியா. நீயும் என்னை காதலிக்கரனுதா நினைக்கிற எனக்கு எப்போ பதில் சொல்லுவ உனக்காக காத்து கெடக்கற தவிச்சிட்டு இருக்கே புருஞ்சிக்கோ சௌம்யானு சொல்லவும். உடனே இவள் காதல் பரிசு கொடுக்கிறா அவனுக்கு முன்னவிட இதயத்துடிப்பு பயங்கரமா அடிக்க ஆரம்பித்துவிட்டது.அப்படியே சௌமியாவ கட்டி தூக்கனும் போல இருந்திச்சு ஒன்னுமே புரியல அவனுக்கு..இரண்டுபேரும் காதல் மழைல நினையராங்க.

கொஞ்ச நாட்களுக்கு பிறகு கல்லூரி முடியுர நேரம் நெருங்கிருச்சு பாலாவும் அவளுக்கு தெரியாம சௌமியாவோட அம்மா அப்பா கிட்ட பேசி சம்மதம் வாங்கிறான் எப்படியோ. எனக்கு வேல கிடச்சிருச்சு நான் இப்போ வேலைகாக பெங்களூரு போர சௌமியா இல்லாம இருக்கவே முடியல என்னால. நான் அவள ரொம்ப நல்லா பாத்துக்குவே.அவளை கல்யாணம் செஞ்சுக்க ஆசை படறேனு சொல்றான். இவங்களும் சரி கொஞ்ச நாட்கள் போகட்டும் சொல்றாங்க சௌமியாவும் வங்கி தேர்வு எழுதிட்டு அவனோட வரவுக்காக காத்திருக்கிறாள்….


Rate this content
Log in

Similar tamil story from Romance