ஆசைகள்
ஆசைகள்


வாழ்க்கையில் சில விஷயங்களை நம் தேவைக்காக தன் ஆசைக்காக தன் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கு எதற்காகவும் ஒரு போதும் ஆசையை விட்டு தருவதில்லை. அதை அடையவேண்டும் என்பதில் மட்டும் சற்றும் சலனமில்லாமல் சரியோ தவறோ என்று யோசிக்காமல் நாம் அடைவதற்கான இலக்குகளை தேடி செல்கிறோம்.
ஆசையை தூண்டும் நம் கண்களுக்கு தெரிவதில்லை அது தவறென்று அந்த ஆசைகளை தூண்டும் மனதிற்கும் புரிவதில்லை எப்படியாவது அடையவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது.
காலம் நேரம் மாறிபோனபிறகும் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நாம் படும் அவஸ்தை எதுவாயினும் சரி முயற்சிக்கிறோம்.
இன்று அந்த வலியை உணர செய்கிறேன் தவறென்று புரிந்து மனம் சோர்ந்து நிற்கிறேன்.
ஆசைப்படுவது தவறில்லை எதன் மேல் ஆசைப்படுகிறோம் என்பதே முக்கியமான ஒன்று நமக்கு எது கிடைத்திருக்கிறதோ அதைவைத்து மனம் கோணாமல் ஏற்றுக்கொள்ள பழகவேண்டும் இதுவே வாழ்க்கை.
நமக்கு கீழே உள்ளவர்கள் நம்மை விட குறைவானவர்களாய் இருந்தாலும் மனமகிழ்ச்சியோடுதான் இருக்கிறார்கள். அது ஏன் நம் மனதிற்கு புரிவதில்லை.
வலியோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும் அதைவைத்து ஏற்றுக்கொண்டு வாழவேண்டும். வழிகள் மாறினாலும் வேதனைகள் இருந்தாலும் விழிகளை வைத்து பல வழிகளை தேடவேண்டும். ஆசைபடுவதை நிருத்தாதே அடைய விரும்பும் இலக்கு உனக்கு ஏற்றதா என்று யோசித்து செய்.