பெண்
பெண்
நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்….
அந்த கோவில் பக்கத்துல பூமி பிளந்து அங்கே மேய்ந்து கொண்டிருந்த ஆடு,மாடு,கோழி எல்லாம் உள்ளே போனதைப் பார்த்ததில் இருந்து எனக்கு தூக்கமே வரலை…..
எட்டிப் பார்த்தேன். அதுல புத்தர்சிலைக்குப் பக்கத்துல குரான் புத்தகம்,மகாவீரர் சிலை எல்லாம் இருந்துச்சு…..அதுக்குப் பக்கத்துல ஒரு சித்தர் மாதிரி தாடியெல்லாம் வச்சுட்டு ஒருத்தர் சிவனுக்கு அபிஷேகம் செய்துட்டு இருந்தாரு……..
மறுநாள் ஊரு சனங்களை எல்லாம் கூட்டிட்டு அந்த இடத்தைக் காண்பிக்கலாம்னு போனால் அந்த இடம் முழுவதும் கிணறுமாதிரி தண்ணீர் நிரம்பி கிடந்துச்சு…..
கண்இமைக்காமல் பேசிய ஆடு மேய்த்த சிறுவனைக் கண்கொட்டாமல் ஹேமா பார்த்தபடி இருந்
தாள்.
இது எதைக்காட்டுது முருகா!
அக்கா! ஒண்ணுமட்டும் தெளிவாபுரிஞ்சுது….சாதி,மதம் அப்படிங்கறது அன்புதான்னு…அதுமட்டுமில்லாமல் இந்த பூமி யாருக்கும் சொந்தம் கிடையாது. அன்பு மட்டும்தான் அடிப்படை.
அப்படியே அவன் சொன்னதை ஒளிப்பதிவாக்கி யுட்யூபில் ஓட விட்டாள்.
ஹேமா ஒரு நாள் இரவு படுத்திருந்தபோது செல்ஃபோன் மணி அடிக்கவே எழுந்து பேசினாள்.
கிடக்கிறது ஒரு குக்கிராமத்துல கீழ்ச்சாதியில் பிறந்துட்டு என்ன ஒரு தினாவட்டு இருந்தா பதிவு போடுவ………எனக் கத்தியபடி அசிங்கமாகப் பேசிய ஃபோனைக் கட் செய்தாள்.
சுவரில் மாட்டியிருந்த காந்தியின் படத்தைப் பார்த்தபடி என்றுதான் சாதிக்கும் பெண்ணுக்கும் விடிவுகாலமோ …..என நினைத்தாள்.