பக்கத்துவீடு
பக்கத்துவீடு
கம்பளியை இறுக மூடியபடி போர்வைக்குள் நடந்து சென்று கொண்டிருந்த ராவுத்தரை ஜேம்ஸ் நிறுத்தினார்.
என்னடா! வேலைக்கு போகாம முக்காடு போட்டு அலையுற?
கம்பளியை எடுத்த ஜேம்ஸ் ராவுத்தரின் உடல் அனலாகக் கொதிப்பதைக் கண்டார். நீ முப்பது வருஷமா என் பக்கத்துவீட்டுல இருக்கிறே!
உன்னை யாரும பார்த்துக்க ஆள் இல்லைன்னு தெரியும்.
என்ன செய்யுரது?
ஒரே இருமபு மில் பக்கம் வேலைக்கு போனியா?
ஆமா! தூசி ஒத்துக்கலை. கட்டிட வேலைக்குப் போனாலும் அப்படித்தான் இருக்கு.
இரு..சைக்கிளை எடுத்துட்டுவர்றேன். கிராமத்துல பிறந்துட்டோம். என்ன செய்யறது? அரசு ஆஸ்பத்திரிக்கு போகணும்னாலும் ஆட்டோவில் 50 ருபாய் கேட்பான் எனக்கூறி நடந்து சென்ற ஜேம்சைப் பார்த்தபடி இருந்தார் ராவுத்தர்.