தோட்டம்
தோட்டம்


சந்திரனுக்கு தோட்டத்தில் இருப்பதென்றால் உயிர். அவன் தனது வீட்டை விற்க ஒருநாள் தீர்மானித்தான். வயதாகிவிட்டதால் அவனால் தோட்டத்தைப் பராமரிக்கமுடியவில்லை. விலைக்கு வாங்க வந்த சர்மா அவனின் மனதைப்புரிந்து கொண்டார். நீங்கள் உங்களது தோட்டத்தை உயிரினும் மேலாக விரும்பியது தெரிகிறது. நான் இங்கேயே உங்களது வீட்டில் வாடகைக்கு இருக்கிறேன். உங்களது காலத்திற்குப்பிறகு விலைக்கு வாங்கிக்கொள்கிறேன். உங்களுக்கென யாரும் இல்லை. இதைவிற்று எங்கே செல்வீர்கள் என்று குறிப்பிட்ட பணத்தை மொத்தமாகத்தந்தார். பணம் வாழ்க்கையில் முக்கியம் கிடையாது என்று சொன்ன சர்மாவின பார்த்து பவளமல்லி மலர்கள் சிரித்தன.