திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் தினம்


ஏன் பாட்டி? சென்னைக்கு போக டிக்கட் வாங்க வேண்டாமா?
கூட்டத்தில் யாரும் கேட்க மாட்டார்கள்.
பாட்டி....நீங்கள் செய்வது தப்பு..
என்னிடம் உங்களுக்கு ஃபீஸ் கட்டத்தான் பணம் வைத்திருக்கிறேன்.
உங்களுக்கு அம்மா இறந்த பிறகு உங்கள் அப்பன் பணமே தர்றதில்லை.
பசிக்குது பாட்டி...பள்ளி இருந்தால் சாப்பாடு சாப்பிடுவேன்.
நாலுநாள்லீவு..சாப்பாடு கொஞ்சம் பொறுத்து வண்டி சென்னை வந்துடும்.பக்கத்துலே கோவிலில் பிரசாதம் வாங்கித்தருகிறேன்.
. . . .. அருகில் இருந்த தாத்தா ஏம்மா இவன் எங்க ஊர்ல பள்ளியில்தான் படிக்கிறான் . எயிடு பள்ளிக்கு தமிழ்மீடியத்துக்கு எதுக்கும்மா பணம்?
இப்பல்லாம் அப்படித்தான் ஐயா! இப்பதான் விதைச்சிருக்கேன்.கையிலே கொஞ்சம் பணதட்டுப்பாடு.
எங்கே இவனைக் காணோம் என பதைத்தபடி தேடத் தொடங்கினாள்.
டிரெயின்கதவைத் திறந்து வந்த சக்திவேல் நிதானமாக டிக்கட் எடுக்காமல் பயணம் செய்வது தப்பில்லையா?அதுதான் டிக்கட் எடுத்து வந்தேன்.நீங்க கொடுத்த உண்டியல் பணம்தான்.
நான் படித்திருக்கிறேன் பாட்டி...கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக இல்லையா?
நான்கூட பள்ளியில் படிச்சிருக்கண்டா....ஏட்டுசுரைக்காய் இப்பல்லாம் வாழ்க்கைக்கு உதவாது.
என்னைக்கு குடிக்காம உங்கள் அப்பா வீட்டிற்கு வருகிறானோஅன்றுதான் உனக்கு விடிவுகாலம்.
நாளைக்கு திருவள்ளுவர் தினம்.பத்து குறள் சொன்னால்தான் சோறும்,நோட்சும், பேனாவும்,பரிசு தருவாங்க.. யாரோ பெரிய தலைவரெல்லாம் வர்றாங்க.போய்ட்டு வா...
அதுக்குதானா பாட்டி தினமும் திருக்குறள் படிக்கிறது.கடைபிடிக்கிறதுக்கு இல்லையா?
நடைமுறைக்கு மாறிக்கப்பா....என்றாள் பாட்டி.