ஒழுக்கம் விழுப்பம் தரலான்
ஒழுக்கம் விழுப்பம் தரலான்
கந்தன் படிப்பில் படு சுட்டி. வினோத்தோ சுமார் ரகம்தான்.
இரண்டுபேரும் ஒன்றாக பள்ளிக்கு வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். வினோத் அப்பா சொன்னது நினைவுக்க வந்தது. டேய்! இந்த தடவை கந்தனைவிட இரண்டு மதிப்பெண்ணாவது கூட வாங்கிடணும்னா! அந்த சாதிக்காரனுங்க முகத்துல கரியைப்பூசிடணும்டா!
ஏம்பா..இப்பவே சாதி வெறியை என்னிடத்தில் பதிக்கிறீங்க!
டேய்! நாளைக்கு நான் தேர்தல்ல நின்னு ஜெயிச்சேன்னா என் பிள்ளை என்ன செய்யுறான்னு பார்ப்பார்கள்.
அப்பா சொன்னது நினைவுக்கு வர கந்தனுடன் பேசத்
தயார் ஆனான்.
கந்தா! இந்தமுறை தேர்வுக்கு எல்லாப்பாடமும் படிச்சிட்டியா?
இல்லைடா! ஆசிரியர் சொல்றதைக்கேட்டு நோட்ஸ் எடுத்திருக்கேன்.அவ்வளவுதான்!
எங்கப்பா உன்னைவிட ஜாஸ்தியா மார்க் வாங்க சொல்றாருடா!
என்னால உன் அளவுக்கு படிக்க முடியலைடா!
நீ ஒண்ணும் கவலைப்படாதே! எழுதும்போது பேப்பரைக் காண்பிக்கிறேன். பார்த்து எழுது.....
அது தப்புடா! எங்கப்பா பெருமைக்காக நான் உனது கொள்கையை விட்டுத்தரமுடியாது என திருக்குறள் புத்தகத்தை பையில் வைத்தபடி பள்ளி வாசலை நெருங்கினர்.