கீரை
கீரை
கீரை விற்றுக் கொண்டிருந்த பொன்னம்மா வேகமாக வாசலுக்கு வந்தாள்.ஓ! இன்று பொங்கல்..கீரை யாரும் வாங்க மாட்டார்களே! என யோசித்தாள்.தெருக்கோடியில் தோட்டம் வைத்திருக்கும் தேன்மொழிஅக்கா வீட்டிற்குச் சென்றால் கன்னுப்பூளை செடியும்,புதினாவும்,கொத்துமல்லியும் தோட்டத்தில் வைத்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டு வேகமாக நடைபோட்டாள். மாடியில் தோட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தேன்மொழி பொன்னம்மாவைக் கண்டவடன் கீழே இறங்கி வந்தாள். என்கிட்டே கீரை எல்லாம் இருக்கு! வேண்டாம்மா!
அதுக்கு நான் வரலைம்மா!
இன்னைக்கு சந்தைக்குப் போகலை.....உங்க தோட்டத்துக்கீரைகளைக் கொடுத்தீங்
கன்னா வித்துட்டு பணம் தர்றேன்.
என்ன கீரை வேணும்....
மாடியில் புதினா,கொத்துமல்லி,அரைகீரை இருக்கு......
கீழே கரிசலாங்கண்ணி,பொன்னாங்கண்ணி இருக்கு......பூச்சிமருந்தெல்லாம் அடிக்காத ஆர்கானிக் கீரைன்னு சொல்லு! வேகமாகப்போகும்.....பெசண்ட்நகர் அடுக்கத்திற்குள் இந்த கீரை கேட்டுக்கிட்டே இருந்தாங்க! சாதா கீரை என்றால் பத்துரூபாய்...இந்த கீரை என்றால் பதினைந்து. உங்களுக்கு எவ்வளவும்மா!
நீ விற்றுவிட்டு இருப்பதைக்கொடும்மா!
சந்தோஷமா கொடுக்கிறதை நான் வாங்கிக்கறேன்....தோட்டத்தில் இருந்த சாமந்திப்பூக்கள் தேன்மொழியைப் பார்த்து மௌனமாகச் சிரித்தன.