நெய்
நெய்


கலைவாணியைக் கைபிடிக்க கருணாகரன் எவ்வளவோ முயற்சி செய்தும் மாமாவும்,அத்தையும் சொந்தத்தில் சம்பந்தம் செய்ய விருப்பப்படவில்லை. சிறுவயதில் இருந்தே கலைவாணிதான் உனக்கு என சொல்லி வளர்த்தீங்களே அம்மா! என தாயிடம் தன் மனக்குறையை வெளியிட்டான். பணம்தான்டா முன்னாடி நிற்கும். நீ அதுக்கு பின்னாடிதான்டா!
விடாப்பிடியாக ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சென்னை மாநகரம் முழுக்க அடுக்குமாடி கட்டிடங்களாக வாங்கிக் குவித்து ஒவ்வொன்றிலும் கலைவாணி என்ற பெயர் தாங்கிய பலகையை வைத்து அழகு பார்த்தான்.
மாமா பணம் இருக்கிறதென்று ஒரு குடிகாரனிடம் கலைவாணியை ஒப்படைக்க ஒன்பது ம
ாதக் கருவில் கல்யாண் வயிற்றில் இருக்கும்போதே குடிகாரன் இறந்துவிட கலைவாணி அனாதையானாள். திரும்பவும் மாமாவிடம் சென்று மாமா! கலைவாணியை இப்பவாவது திருமணம் செய்து தருவீர்களா? என்றான்.
கலைவாணி கொடுத்த ஊக்கத்திலும்,உற்சாகத்திலும்தான் நான் இவ்வளவுதூரம் முன்னேறி வந்திருக்கேன் மாமா........
உள்ளிருந்து கலைவாணி வேகமாக அறைக்குள் இருந்து வெளியே வந்து நெய் எங்காவது திரும்பவும் வெண்ணெய் ஆக முடியுமா? அதுபோலத்தான் பெண்களும் அப்பா! முடிந்தால் கல்யாணை எடுத்து வளர்க்கச் சொல்லுங்கள் என சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள். அப்பா கண்ணீர் உகுத்தபடி இருந்தார்.