நீ போகலாம்!
நீ போகலாம்!


கோபாலா! உன்னை விட்டால் யார் இதைச் செய்வார்கள்...என அம்மா பலமுறை வற்புறுத்தியதால் பள்ளியிலிருந்து கல்லூரிவரை அப்பாவுக்கு கடையில் கூடமாட பல உதவிகள் செய்து வருவான். குடும்பம் பெரியது என்பதால் மூத்தவன் என்பதால் பொறுப்புகள் அனைத்தும் கோபாலன் தலைமேல் விழுந்தன. வங்கித் தேர்வு வருதும்மா! நான் எழுதணும்...படிக்கணும்!
அம்மா கௌரி மௌனமாக உத்தரத்தைப் பார்த்தபடி அப்பாவுக்கு வயதாகிறது. கடையைப் பார்த்துக்கொள்ள ஆளில்லை. இருந்தாலும் உனது படிப்பு நான் போட்டது என நான் சொல்லிக்காட்ட தயாரில்லை. நீ உனது வழியைப் பார்த்துப் போகலாம் என்று கூற மகிழ்ச்சியுடன் கோபாலனும் வங்கித்தேர்வு எழுதி வெற்றி பெற்று பணியில் அமர்ந்தான்.
காலங்கள் உருண்டோட ரிடையர்மெண்ட் வாங்கிவிட்டு சும்மா இருக்க முடியாமல் அப்பா செய்த காய்கறி வியாபாரத்தை ஏசியில் உட்கார்நதபடி செய்து கொண்டிருந்ததை அவன் அம்மா படுக்கையில் படுத்தபடி சிரித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்.