கோலம்
கோலம்


எங்கே உன் மருமகளைக் காணோம்?என்றாள் சசிரேகா.
இன்னும் பிள்ளைகளுக்கு தேர்வு முடியலை!
அதுக்கும் கோலப்போட்டிக்கும் என்ன சம்பந்தம்?
இப்பல்லாம் கூட உட்கார்ந்தால்தான் படிக்கிறேங்கறாங்க!
காலையிலும் நீதான் எழுந்து கோலம் போடுகிறமாதிரி தெரியுது!
ஆமாம்!எனக்கு வயசு இப்பதான் எண்பது...ஆனால் பேரப்பசங்களுக்கும்,மருமகளுக்கும் பணிவிடை செய்வது பழக்கமாகிவிட்டது..
கலர் கோலம்னு சொல்லி இருந்தால் வந்திருக்க மாட்டேன்.
ஆமாம்! நீ எதுக்கு வந்தே!
இங்கு அந்த பெண் ஓரமாக கோலம் போடுகிறாள் பார்! அவள் என்ற வருங்காலமருமகளா வர தகுதியானவரா என பார்க்க வந்தேன்.
அதெப்படி முடியும்?
இந்த போட்டியில் வெறும் டிசைன் மட்டும்தான். சிக்கனமாக குடும்பத்தை நடத்தறவளா இருந்தால் மாவை கொஞ்சம் பயன்படுத்தி கோலம் பெரிசா போடலாம்.
பாதி பேருக்கு மேலே செருப்புகாலோடுதான் கோலம் போடுகிறார்கள்.
இதுமாதி
ரி அவ இல்லை. எங்க வீட்டிற்கு செருப்புபோட்டு டப்பா மாவையும் காலி செய்தால் என் மாமியாரின் பேச்சுக்கு ஆளாக முடியாது.
இவ்வளவு இருக்கா இந்த காலத்திலே என வாயைப் பிளந்தாள் காமாட்சி.
பெண்களுக்கு ஓயாமல் வேலை கொடுப்பாங்க! அதுலயும் சாதி,மதம்னு பார்க்காமல் ஏற்றத்தாழ்வு இல்லாமல் கூடுற இடம். ஆனாலும் கூட்டம் இந்த வருடம் குறைவுதான். போன வருடம் பள்ளி வாசலில் இருந்துச்சு..இதைவிட கூட்டம் குறைவு. அதுதான் டீசண்டா ஹோட்டலில் ஸ்னாக்ஸ் ஏற்பாடு செய்துட்டு பரிசும் வாங்கிட்டு போங்கன்னு கூப்பிடறாங்க..
இதுக்கெல்லாம் மட்டும் ஏற்பாடு செய்றாங்களே!..இந்த பெண்கள் பாதுகாப்புக்கு இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா கேஸ் போடலாம்ல..ஃபாரீன்மாதிரி திருமணத்துக்கு முன்னாடியே சேர்ந்து வாழ ஆரம்பிச்சுடுதுங்க……
பூனைக்கு மணி கட்டுறது யாரு? எல்லாம் வெளிநாட்டுமோகம்னா என்ன பண்ணமுடியும்?!