குடும்பமே போச்சு.. பிறந்த நாளுக்கு தன்னையே பரிசாக கொடுத்த நடிகை.. முடிவு கட
குடும்பமே போச்சு.. பிறந்த நாளுக்கு தன்னையே பரிசாக கொடுத்த நடிகை.. முடிவு கட
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அந்த அழகான நடிகர் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தில், பல முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை முடித்த கையோடு சினிமாவை விட்டு விலகும் முடிவில் இருக்கிறார்.
அந்த அழகு நடிகருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் என இருக்கும் நிலையில், அந்த நடிகர் சில காரணங்களால் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து இருப்பதாக அவ்வப்போது பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. அது உண்மை என்பது போல, எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அந்த நடிகரின் மனைவியோ குழந்தைகளோ வந்ததே இல்லை. அழகாக இருந்த குடும்பம் பிரிய காரணம் நம்பர் நடிகை ஒருவருடன், அவர் நெருக்கமாக இருந்ததால், குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு அனைவரும் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
குடும்பமே போச்சு: அந்த கிசுகிசு உண்மைதான் என்பது போல, அந்த நடிகரும், நம்பர் எழுத்து நடிகையுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்தார். அது மட்டுமல்லாமல் மீண்டும் தான் நடித்த ஒரு படத்தில் அவரை ஆட்டம் போட வைத்து மனைவியின் கோவத்தை சீண்டினார். இதோடு பிரச்சனை தீர்ந்தது என்ற பார்த்தால் நடிகை ஒருவரின் கல்யாணத்திற்கும், நம்பர் நடிகையுடன் ஜோடி போட்டு சென்று வாழ்த்து கூறினார்கள். அதுமட்டுமில்லாமல் , அண்மையில் அந்த நடிகரின் பிறந்தநாளுக்கு அனைவரும் வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில், அந்த மூன்றெழுத்து நடிகை மட்டும் வாழ்த்து செல்வதற்காகவே தூங்காமல் காத்து இருந்து, அந்த நடிகரின் இருக்கும் புகைப்படத்தை நடுராத்திரியில் பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
முடிவு கட்டகாத்திருக்கும் மகன்: அந்த நடிகரின் பிறந்த நாளுக்கு அவரின் மனைவி, குழந்தைகள் என யாருமே வாழ்த்து சொல்லவில்லை. ஆனால், நம்பர் நடிகையோ பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லியது மட்டுமில்லாமல், தன்னையே பரிசாக கொடுத்து இருக்கிறார். ஏற்கனவே, இந்த நடிகையால் தான் நடிகரின் குடும்பமே பிரிந்து இருக்கும் நிலையில், பிறந்த நாளுக்கு நடுராத்திரியில் போட்டோவை வெளியிட்டு வாழ்த்து சொன்ன செய்தியைப் பார்த்த, நடிகரின் மகன் கொந்தளித்து போய் இருக்கிறார். இதுக்கு மேல் அந்த நடிகையை சும்மா விடக்கூடாது, இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இந்த பிரச்சனை என்னைக்கு பூதாகரமாக வெடிக்கும் என்று தெரியவில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

