நான் தான் அந்த பிரபல நடிகரின் மனைவி என ஏமாற்றி பல லட்சம் ஆட்டையை போட்ட துணை
நான் தான் அந்த பிரபல நடிகரின் மனைவி என ஏமாற்றி பல லட்சம் ஆட்டையை போட்ட துணை
சென்னை: பிரபல நடிகர் ஒருவருடன் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த நடிகை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் நடிகரின் மனைவி என ஏமாற்றி சுமார் 25 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
சினிமாவில் சில தயாரிப்பாளர்கள் ஒரு சில டாப் ஹீரோக்களுடன் படம் பண்ணினால் பெரிய கோடீஸ்வரர்களாக மாறிவிடலாம் என்றும் வியாபார யுக்தி தங்களுக்கு நல்லாவே தெரியும் என நினைத்துக் கொண்டு களத்தில் குதித்து விடுகின்றனர்.
ஆனால், நடிகரின் ரியல் பொண்டாட்டி யார், ரீல் பொண்டாட்டி யார் என்று கூட தெரியாத மக்கு பிளாஸ்த்ரிகளாக இருந்து பணத்தை இழந்து தற்போது அய்யோ அம்மா என கத்தி கூச்சலிட்டு நடிகரிடம் புலம்பித் தவித்தால் அவரும் என்ன பண்ணுவார் என்பதுதான் பெரிய பஞ்சாயத்தாக மாறி உள்ளதாக கூறுகின்றனர்.
என் கணவர் தான் கால்ஷீட் கன்ஃபார்ம்: சமீபத்தில், அந்த நடிகர் நடித்த படம் சூப்பர் ஹிட் அடித்து பெரிய தொகையை வசூல் செய்த நிலையில், எப்படியாவது அந்த பிசியான நடிகரின் கால்ஷீட்டை பெற வேண்டும் என முயற்சி செய்துக் கொண்டிருந்த தயாரிப்பாளர் ஒருவர் பற்றி அந்த நடிகரின் பட்ங்களில் நடித்து வந்த நடிகையின் மேனேஜர் மூலமாக தகவல் தெரிய வர, இருவரும் சேர்ந்து செட்டப் டிராமா ஆடிய நிலையில், நடிகரின் மனைவி என்றும் அடுத்த 2 மாதத்துக்குப் பிறகு உங்கள் படம் தான் பண்ணுவார் என்றும் அட்வான்ஸாக ஒரு கோடி வேண்டும் என கேட்க, அந்த தயாரிப்பாளர் இப்போதைக்கு 25 லட்சம் வச்சுக்கோங்க, ஒரு வாரத்தில் மீதம் 75 லட்சம் ஏற்பாடு செய்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டாராம்.
பயம் வந்துடுச்சு: இன்னும் ஒரு வாரம் இப்படியே இந்த டிராமாவை தொடர்ந்தால், இன்னும் 75 லட்சம் என மொத்தம் ஒரு கோடி சுருட்டி விடலாம் என மேனேஜர் சொன்னதை கேட்ட நடிகைக்கு ஆசையிருந்தாலும் பயம் வந்துடுச்சாம். ஒரு வாரத்துக்குள் வசமாக சிக்கினால் அவ்வளவு தான் என நினைத்து நடிகை ஆளே எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
ஏமாந்த தயாரிப்பாளர்: நடிகரின் மனைவி அந்த துணை நடிகை தான் என அவரது பேச்சைக் கேட்டு ஏமாந்துப் போன தயாரிப்பாளர் 75 லட்சம் ரெடி செய்துவிட்டு அந்த நடிகையை தொடர்பு கொள்ள முயற்சி செய்ய போன் ஸ்விட்ச் ஆஃப்பாம். அதன் பின்னர், நடிகருக்கு வேண்டப்பட்ட நண்பர் ஒருவர் மூலமாக விசாரித்த நிலையில், நடிகர் காதுக்கே இந்த விஷயத்தை தயாரிப்பாளர் கொண்டு சென்று இருக்கிறார். இதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்றும் நீங்கள் போலீஸில் புகார் கொடுங்க அவங்க என் மனைவியே இல்லை என நடிகர் திட்டவட்டமாக சொல்லி ஏமாந்து போன தயாரிப்பாளரை துரத்தி விட்டுட்டாராம். தயாரிப்பாளர் காவல் துறையை நாடவும் முடியாமல் இருக்க என்ன காரணம் என்றும் தவறான முறையில் சம்பாதித்த பணமா? அது என்கிற பேச்சுக்களும் வேற கிளம்பி உள்ளன. அந்த துணை நடிகை சிக்கினால் இரண்டு பக்கமும் அடி கன்ஃபார்ம் என்கின்றனர். இப்போதைக்கு அந்த நடிகைக்கு செம ஜாக்பாட் என்றும் கூறுகின்றனர்.

