கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தும் அடங்காத நடிகர்.. இப்போ அனுபவிக்கிறாரு!
கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தும் அடங்காத நடிகர்.. இப்போ அனுபவிக்கிறாரு!
சென்னை: இந்த நடிகரை எல்லோரும் நல்லவர் வல்லவர் என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் நடிகர் கிளி மாதிரி இருக்கும் அவரது மனைவிக்கு துரோகம் செய்த தகவல் லேசாக கசியத் தொடங்கியதும்,கோலிவுட்டில் நடிகர் மீது இருந்த மரியாதைகள் மொத்தமாக மாறிவிட்டது. தற்போது அந்த நடிகர் குறித்த பேச்சுதான் தற்போது வேகமாக பரவி வருகிறது.
அதாவது நடிகருக்கு திருமணம் ஆகி வாரிசுகள் எல்லாம் வந்துவிட்டார்கள். இத்தனைக்கும் அவருக்கு முதல் திருமணமே காதல் திருமணம் தான். உருக உருக காதலித்து திருமணத்தை செய்து கொண்ட நடிகர் நல்லாத்தான் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு வாரிசுகள் எல்லாம் வந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் நடிகர் தனது வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டி இருந்ததால், தனது மனைவி மற்றும் குழந்தைகளை தனது சொந்த ஊருக்கு ஷிஃப்ட் செய்துள்ளார். அவ்வப்போது மட்டும் அவரை சென்னையில் வந்து சந்தித்து விட்டுச் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. இவரும் அவ்வப்போது சொந்த ஊருக்கு சென்று வருவாராம்.
மனைவியை ஏமாற்றிய நடிகர்: இப்படி இருக்கையில் நடிகருக்கு உடன் பணியாற்றிய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாற, தனது மனைவியை விட்டுவிட்டு அந்த பெண் பிரபலமே கதி என்று இருந்துள்ளார். இதனால் மனைவியை மொத்தமாக கழட்டி விட்டுவிட்டு தனது மனதுக்கு நெருக்கமான அந்த பெண்ணுடன் இருக்க முடிவெடுத்து விட்டாராம். இது இப்படி இருக்கையில் இந்த விஷயம் தற்போது லேசாக கோலிவுட்டில் பரவத் தொடங்கி உள்ளது.
கிளி மாதிரி பொண்டாட்டி: பலரும் நடிகரின் இந்த செயலைக் கேள்விப்பட்டு கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் என்ற ஊர்ப்புற சொலவடையைச் சொல்லி நடிகரைத் திட்டி வருகிறார்கள். நடிகருக்கு அவரது மனைவியின் அருமை தெரியவில்லை அதனால் தான் அவர் இவ்வாறு செய்கிறார். நடிகருக்கு அந்த பெண் பிரபலத்தின் பித்து பிடித்து விட்டது. அதனால் தான் நடிகர் இப்படியான மோசமான முடிவுகளை எடுத்து வருகிறார். நடிகருக்கு எப்போதுதான் புத்தி வருமோ என்று பலரும் பேசி வருகிறார்கள்.

