பாலிவுட்டில் ஓவரான அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர்..
பாலிவுட்டில் ஓவரான அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர்..
மும்பை: இந்த நடிகை தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். இது மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவில் நடிகை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தும் வருகிறார். வளர்ந்து வரும் நடிகர்கள் படத்தில் கூட நடிக்க யோசிக்கும் நடிகை இவர். நடனத்தில் இந்த நடிகை ஸ்கோர் செய்தும் வருகிறார்.
இப்படி இருக்கையில் நடிகை இங்கு வருமானம் போதாது, இது மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் இருந்து கொண்டு இருந்தால் இந்திய அளவில் தான் அறியப்படுவோம், இதுவே பாலிவுட்டுக்கு போனால் உலக அளவில் கவனத்தை ஈர்த்து விடலாம், அப்படியே ஹாலிவுட்க்கோ அல்லது வெளிநாட்டு படங்களில் நடிக்கவும் தொடங்கிவிடலாம் என்று எல்லாம் பிளான் போட்டு பாலிவுட்டில் கால் பதித்தார் நடிகை.
நடிகையின் எண்ணமும் அதற்கு அவர் போட்ட பிளானும் சரிதான். ஆனால் பாலிவுட்டில் அவருக்கு எதிர்பார்த்த அளவில் சூழல்கள் அமையவில்லை. அதாவது தென்னிந்திய சினிமாவில் நடிகை டாப் நடிகையாக உள்ளார். இப்படி இருக்கையில் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்ததும் நடித்தார். தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்கலாம் என்று நடிகை தனக்குத் தெரிந்த வட்டாரத்தில் காய்களை நகர்த்தியுள்ளார்.
அட்ஜெஸ்மெண்ட் : அங்கு என்ன பிரச்னையாகி இருக்கிறது என்றால், பாலிவுட்டில் நடிகை அப்ரோச் செய்த தயாரிப்பு நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் நடிகைய அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்துள்ளார்கள். இதுதான் நடிகைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகையை தென்னிந்திய சினிமாவிலேயே இப்படியான தொல்லைகளை ஆரம்ப காலத்தில் எதிர்கொண்டு இருந்தாலும், அவர் வளர்ந்த பின்னர் அவருக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் வலம் வந்தார்.
அப்படியே ரிட்டன்: ஆனால் பாலிவுட்டில் நடிகைக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தையைக் கேட்டதும் அதிர்ச்சி ஆகியுள்ளார். அதுவும் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் நடிகையிடமே சம்பந்தப்பட்ட நபர்கள் நேரடியாகவே கேட்டுள்ளார்கள். ஏதோ ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் தான் இப்படி என்றால், நடிகை எதிர் கொண்ட சில தயாரிப்பு நிறுவனங்களிலும் இந்த நச்சரிப்பு இருந்துள்ளது. இதில் நடிகையை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய விஷயம் என்னவென்றால் நடிகையைவிட வயது குறைவான ஆண்களும் வீக் எண்ட் பார்ட்டிக்கு என்னுடன் சேர்ந்து கொள்கிறீர்களா என்று மறைமுகமாக அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்துள்ளார்கள். இப்படியான அட்ஜெஸ்ட்மெண்ட் நச்சரிப்புகளை எதிர்கொண்ட நடிகை இந்த நச்சரிப்புக்கு எல்லாம் நான் ஆள் இல்லை, நிம்மதியாக தென்னிந்திய சினிமாவிலேயே நடித்துக் கொள்ளலாம் என்று நடிகை தற்போது மீண்டும் தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

