பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் ஹனிமூன் கொண்டாடிய நடிகை..
பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் ஹனிமூன் கொண்டாடிய நடிகை..
சென்னை: பிரபல நடிகருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தங்களது ஹனிமூனை கொண்டாடலாம் என புதிதாக திருமணம் ஆன நடிகை கணவரை அழைத்துச் செல்ல அவரும் ரொம்பவே சந்தோஷப்பட்டு உல்லாசமாக இருக்க அங்கே எந்த முன் யோசனையும் இல்லாமல் சென்று விட்டாராம். ஆனால், ரகசிய அறையில் முனகல் சத்தம் கேட்டு ஒரே குழப்பத்தில் கணவர் சந்தேக கண்ணோடு மனைவியை பார்த்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
பிரபல மலையாள நடிகை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், கணவருடன் கொச்சியில் உள்ள பீச் ஹவுஸை தனது ஹனிமூனுக்காக தேர்வு செய்துள்ளார் என்கின்றனர். ஒரு பக்கம் கணவருடன் தேனிலவை ஜாலியாக கொண்டாடிய நடிகை இன்னொரு பக்கம் கணவருக்கு டிமிக்கி கொடுத்து விட்டாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
சினிமாவில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் அந்த இளம் நடிகை சீக்கிரமே திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவரை சுற்றி கிளம்பிய பல வதந்திகள் அப்படியே ஸ்டாப் ஆகிவிட்ட நிலையில், தற்போது இப்படியொரு பகீர் கிளப்பும் கிசுகிசு கிளம்பி பூகம்பத்தை வெடிக்கச் செய்திருக்கிறது.
பிரபல நடிகரின் பீச் ஹவுஸ்: அந்த நடிகருடன் ஒரு சில படங்களில் நடிகை இணைந்து நடித்திருந்தாலும், நடிகர் வேறொருவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலான நிலையில், வெளிநாட்டுக்குச் சென்று ஹனிமூனை கொண்டாடவே அவரது கணவர் விரும்பினாராம். ஆனால், தொழில் தான் தனக்கு ரொம்பவே முக்கியம் என்றும் அடுத்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்கிற நிலை உள்ளதால் வெளிநாட்டுக்கு இப்போதைக்கு வேண்டாம் எனக் கூறி நடிகை தவிர்க்க தனது பீச் ஹவுஸிலேயே கொண்டாடுங்களேன் என நடிகர் ஷூட்டிங்கிற்கு இடையே ஒரு வாரம் லீவு கொடுத்து நடிகைக்கு பண்ணை வீட்டுச் சாவியையும் கொடுத்ததாக கூறுகின்றனர்.
கணவருக்கு தெரியாமல்: ஆரம்பத்தில், நடிகரின் செயலையும் தனக்காக லீவு போட்டு விட்டு ஹனிமூனுக்கு மனைவி வந்துவிட்டாரே என கணவர் ரொம்பவே சந்தோஷப்பட்டாராம். ஆனால், அதன் பின் நடந்த சம்பவங்களால் ரொம்பவே அதிர்ச்சியில் இருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.
ரகசிய அறையில் அந்த சத்தம்: மனைவியுடன் ஜாலியாக பண்ணை வீட்டில் தேனிலவை கணவர் கொண்டாடி வந்த நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் நள்ளிரவு நடிகை தனது பக்கத்தில் இல்லை என்பதை அறிந்து கணவர் ஷாக் ஆகி தேட ஆரம்பித்து இருக்கிறார். ரகசிய அறையில் இருந்து ஏதோ சத்தம் வந்த நிலையில், அந்த பக்கம் கணவர் தேடிக் கொண்டு செல்ல, உடனடியாக அங்கே இருந்து மனைவி வெளியே வந்து ஏதோ சொல்லி சமாளித்து கணவரை மீண்டும் பெட்ரூமுக்கு தூங்க அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாராம். ஆனால், அந்த சத்தமும் நடிகை திடீரென அர்த்த ராத்திரியில் காணாமல் போனதும் ஏன் என கணவருக்கு ஒரே குழப்பமாக மனதை போட்டு வாட்டி வதைத்த நிலையில், தனது நண்பர்கள் சிலருடன் பகிர்ந்துள்ளாராம். அதுதான் தற்போது காத்து வாக்கில் கசிந்து உலா வருகிறது என்றும் நடிகையிடம் நேரடியாக கேட்கவும் கணவருக்கு தைரியம் இல்லை என்கின்றனர்.

