STORYMIRROR

Manikandan

Drama Romance Tragedy

3  

Manikandan

Drama Romance Tragedy

ஆசை வலையில் வீழ்த்திய நடிகரை ஜெயிக்க வைக்க போராடும் பிரபலம்..

ஆசை வலையில் வீழ்த்திய நடிகரை ஜெயிக்க வைக்க போராடும் பிரபலம்..

2 mins
3

சென்னை: இந்த நடிகர் தமிழ் சினிமா மட்டும் இல்லை தென்னிந்திய சினிமாவுக்கு நன்கு தெரிந்தவர். இந்திக்குக்கூட முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. பெரிய இடத்துப் பையன் என்பதாலே சினிமாவில் இளம் வயதிலேயே காலடி எடுத்து வைத்துவிட்டார். தெலுங்கில் ஹிட் அடிக்கும் படங்களை பட்டி டிங்கர் பார்த்து தமிழில் தனக்கான வெற்றிகளைக் குவித்து வந்தவர்.

இவர் இளம் வயதிலேயே பெரிய இடத்துப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிம்மதியாக வாழ்ந்து வந்த இவருக்கு இரண்டு குழந்தைகள். இவருக்கும் இவரது காதல் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் ஒரு கட்டத்தில் பிரிவதாக முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதில் நடிகர் தான் பிரிவதாக முடிவெடுத்தார், அவரது மனைவி அப்படி எல்லாம் எதுவும் முடிவெடுக்கவில்லை எனவும், நடிகர் வேறு ஒரு பிரபலத்துடன் நெருங்கிப் பழகுவதாகவும் சிலர் குற்றம் சாட்டினர்.

பெண் பிரபலம்: இப்படி இருக்கையில், நடிகர், தனது மனைவியை விட்டுப் பிரிந்த பின்னர், பெண் பிரபலம் ஒருவருடன் மிகவும் நெருக்கமாகவே காணப்பட்டார். அவர் எங்கு போனாலும் அந்த பெண் பிரபலத்துடன் தான் போகிறார் போல என்று திரைத்துறையில் பலரும் பேசும் அளவுக்கு அவரது நடவடிக்கைகள் இருந்தது. இந்த மாதிரி எல்லாம் திரையுலகமும் இணைய உலகமும் பேசுகிறார்கள் என்று நடிகருக்கும் பெண் பிரபலத்திற்கும் தெரிந்தாலும் இருவரும் எதையும் கண்டுகொள்ளாமல் எப்போதும் போல இருந்தார்கள்.

அடுத்த கட்டம்: இப்படி இருக்கையில் நடிகருடன் நெருக்கமாக பழகி வரும் பெண் பிரபலம் நடிகரை இப்போது இருக்கும் நிலையை விட மேலும் உயரத்திற்கு கொண்டு போகவேண்டும் என்று முடிவெடுத்து, அவரை திரைத்துறையில் அடுத்த அவதாரம் எடுக்க யோசனை கூறியுள்ளார். யோசனை கூறியது மட்டும் இல்லாமல், தனது சேமிப்பில் இருந்தும் பல கோடிகளை நடிகருக்கு கொடுத்துள்ளார், அந்த பிரபலம். இதனால் தற்போது நடிகர் நடிகராக மட்டும் இல்லாமல், அடுத்த அவதாரத்தையும் எடுத்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட பலரும், அந்த பெண் பிரபலம், திருமணமான நடிகரை மயக்கி தன் வலையில் வீழ்த்திய அந்த பெண் பிரபலமா இப்போது நடிகரை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த முக்கிய காரணம் என்று ஆச்சரியத்தோடு பேசி வருகிறார்கள். பேசுற வாய் ஆயிரம் பேசும் நாம் முன்னேறும் வழியைப் பார்க்கலாம் என நடிகரும் அந்த பிரபலமும் அடுத்தகட்ட வேலைகளில் களமிறங்கிவிட்டார்களாம்.


Rate this content
Log in

Similar tamil story from Drama