தோழி வேசத்தோடு நடிகருடன் கும்மாளம் அடிக்கும் பிரபலம்..
தோழி வேசத்தோடு நடிகருடன் கும்மாளம் அடிக்கும் பிரபலம்..
சென்னை: இந்த நடிகர் இப்போது சர்ச்சை மன்னனாக மாறி நிற்கிறார். தமிழ் சினிமாவில் இவர் காலடி எடுத்து வைத்த போது அவர் மீது பலருக்கும் நல்ல மதிப்பு இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடிகரின் நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. திருமணம் ஆகி புள்ள குட்டி எல்லாம் எடுத்த பின்னர், நடிகர் பெண் பிரபலம் ஒருவருடன் இணைந்து கொண்டு ஓவர் கும்மாளம் அடித்துக் கொண்டு இருந்துள்ளார்.
அந்த பெண் பிரபலம் தனது வாழ்க்கையில் வந்ததுமே, அந்த நடிகரின் மனைவிக்கு கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த பெண் பிரபலம் நடிகருடன் ரொம்பவும் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார். நடிகரின் மனைவிக்கு சந்தேகம் வந்தது மட்டும் இல்லாமல், அவருக்கு தெரிந்தவர்களும் நடிகருடன் பெண் பிரபலத்தை அங்கு பார்த்தேன், இங்கு பார்த்தேன் என்று சொல்லி உள்ளார்கள். புருஷன் கை விட்டுப் போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் இருந்த நடிகரின் மனைவி, நடிகரை நச்சரிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் நடிகரோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அந்த பெண் பிரபலத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.
தோழி வேசம்: இப்படி இருக்கையில் ஒரு முறை நடிகருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையில் நடிகரோ தனது மனைவியிடம் சவால் விட்டுள்ளார். அதன் பின்னர் இருவரும் பிரிந்து விட்டார்கள். ஆனால் இருவருக்கும் இன்னும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கிடைக்கவில்லை. இப்படி இருக்கையில் நடிகர் அந்த பெண் பிரபலத்துடன் தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் காணப்படுகிறார். இன்னும் சொல்லப்போனால் எங்கு அறிமுகப்படுத்தினாலும் தனது தோழி என்றுதான் அறிமுகம் செய்து வைக்கிறார். ஆனால் இவர்கள் அடிக்கும் கூத்து எங்களுக்குத் தெரியாது என நினைக்கும் பல பிரபலங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நடிகரின் மனைவி போட்ட பிளான்: இப்படி இருக்கையில், நடிகர் தனது தோழியை காதலி என்றோ, தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் என்றோ அறிமுகப்படுத்தாமல் இருப்பதற்கு காரணம் முதல் மனைவியை இன்னும் விவாகரத்து செய்யாததுதான். முதல் மனைவியும் விவாகரத்து கொடுத்தால் தானே நீ நிம்மதியாக இருக்க முடியும், நினைத்த வாழ்க்கையை வாழ முடியும், நான் அப்படி இருக்க விடமாட்டேன் என்று திட்டம் போட்டு விவாகரத்து கொடுப்பதில் பல்வேறு சிக்கல்களை வேண்டும் என்றே ஏற்படுத்தி வருகிறாராம். மனைவி மனசு வைத்தால்தான் நடிகருக்கும் அந்த பெண் பிரபலத்துக்குமே திருமணம் நடக்குமாம். ஆனால் நடிகரின் மனைவி போட்டுள்ள ஸ்கெட்ச்சைப் பார்த்தால் விவாகரத்து வழக்கை எவ்வளவு தூரம் இழுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்துச் சென்று, நடிகரின் நிம்மதியைக் கெடுப்பதுதானாம்.

