தம்பி நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட..
தம்பி நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட..
சென்னை: ஏற்கனவே பட்டது போதும் என்றும் இதற்கு மேல் பாடி தாங்காது என அந்த டைரக்டரின் மாஸ்டர் பிளானுக்கு ஒரேயடியாக செக்மேட் வைத்து போதும் தம்பி வேற ஆளை பார்த்துக்கோங்க என அனுப்பி வைத்து விட்டாராம் அந்த டாப் நடிகர் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன்.
சின்ன பட்ஜெட் படங்களை திறம்பட கையாண்ட இயக்குநருக்கு தலையில் பனங்காயை வைத்தது போல தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் கிடைத்ததும் நோ சொல்ல மனமில்லாமல் எப்படியாவது வெற்றியை கொடுத்து விடலாம் என தனக்கு தெரியாத வித்தையை தெரிந்து போல காட்ட சீன் போட்டு கடைசியில் சிக்கிக் கொண்டார் என்கின்றனர்.
ஆரம்பத்தில் உச்ச நடிகர் படம் என்றதுமே நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு வந்த நடிகரை நல்லா நம்ப வைத்து ஏமாற்றிய நிலையில், படத்தில் என்ன பிரச்சனை, தன்னுடைய கேரக்டர் என்ன? டைரக்டர் எப்படி ஏமாற்றினார் என்பதை லேட்டாக புரிந்துக் கொண்ட டாப் நடிகர் இதற்கு பிறகு அவருடன் பயணிப்பது தனக்குத்தான் தலைகுனிவு என நினைத்து ஒதுங்கிக் கொண்டார் என்கின்றனர்.
சரக்கு இல்லை: வெறும் போதை வஸ்த்துக்களை காட்டியே படத்தை ஓட்டிவிடலாம் என்று மனப்பால் குடித்த இயக்குநரிடம் உண்மையாக கதை மற்றும் திரைக்கதையை ஆழமாகவும் அசத்தலாகவும் வடிவமைக்கும் திறமையே இல்லை என்பது பல்லிளித்து காணப்பட்ட நிலையில் இதற்கு மேல் அந்த இயக்குநரை நம்பி பிரயோஜனம் இல்லை என டாப் நடிகர் டாட்டா காட்டி விட்டார் என்கின்றனர்.
வசூல் மோசடி வேறு: ஆரம்பத்திலேயே நடிகரின் பெயரை பயன்படுத்தி ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகளையும் டைரக்டர் பார்த்ததை அறிந்துக் கொண்ட நடிகர் இவருடன் ஒரு படம் பண்ணலாம் என்கிற திட்டத்தையே தற்போது அவசர அவசரமாக கை விட்டு விட்டார் என்றும் நடிகரின் முடிவு இண்டஸ்ட்ரியில் மற்ற நடிகர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருப்பதாக கூறுகின்றனர்.
உச்ச நடிகருக்கும் பிடிக்கலை: டைரக்டரின் திறமை மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக டாப் நடிகர் துரத்தி அடித்த நிலையில், உச்ச நடிகருக்கும் தொடர்ந்து இவருடன் பயணிப்பது பிடிக்கவில்லை என்றே கூறுகின்றனர். பாஸ் நடிகர் தொடர்ந்து சப்போர்ட் செய்து வந்தாலும், இருவரும் சேர்ந்து நம்மை மீண்டும் மொட்டையடித்து விடுவார்களோ என்கிற எண்ணம் நடிகருக்கு அதிகமாகவே இருப்பதாகவும் அதனால், வேறு யாராவது திறமையான இயக்குநர்களை பார்க்கலாமா? என்கிற முடிவுக்கும் வந்து நண்பரிடமும் தனது எண்ணத்தை உச்ச நடிகர் சொல்லியிருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

