விளையாடும் பணம்.. இரண்டு பொண்டாட்டி கட்டிக் கொண்டு ஜகஜோதியாக வாழும் பிரபலம்
விளையாடும் பணம்.. இரண்டு பொண்டாட்டி கட்டிக் கொண்டு ஜகஜோதியாக வாழும் பிரபலம்
சென்னை: இந்த பிரபலம் பார்ப்பதற்கு அமைதியாக அவதார புருஷன் போல இருந்தார். நிம்மதியாக குடும்ப வாழ்க்கையில் பொண்டாட்டி குழந்தைகள் என இருப்பார் என்று பார்த்தால், கடந்த சில ஆண்டுகளாகவே இவரது பெயர் பல இடங்களில் அடிபட்டது. இப்படி இருக்கும்போது இவருக்கும் மற்றொரு பெண் பிரபலத்திற்கும் ஏற்பட்ட பழக்கம் இப்போது அவரை இரண்டு பொண்ட்டாட்டிகாரராக மாற்றியுள்ளது.
பல பிரபலங்களும் தங்களுக்கு கிளி மாதிரி மனைவி இருந்தாலும், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண் நடிகைகள் அல்லது பெண் பிரபலங்களுடன் ரகசிய உறவு வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருந்த ரகசிய உறவு அம்பலப்பட்டு, மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ரகசிய உறவில் இருந்தவர்களுடன் பகிரங்க உறவில் வாழத் தொடங்கியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
இரண்டாவது கல்யாணம்: இப்படி இருக்கும்போது பிரபலம் ஒருவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை குட்டியுடன் குடும்ப வாழ்க்கையில் இருந்தார். பலரும் அவரை பாராட்டி கொண்டு எல்லாம் இருந்தார்கள். ஆனால் அந்த பிரபலமோ தனது மனைவியை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வராமலே இருந்தார். இப்படி இருக்கும்போது, நடிகர் தன்னுடன் நெருங்கிப் பழகிய சினிமா பிரபலம் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அதுவும் நெருங்கிப் பழகிய பெண்ணை கர்ப்பமாக்கி வளைகாப்பு நடத்தும் மாதத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண்ணிடம் கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லி இவர் எவ்வளவோ போராடியுள்ளார். ஆனால் அந்த பெண் பிரபலமோ, எஸ்கேப் ஆக பார்க்கிறார் என்று தெரிந்து கொண்டு, கர்ப்பத்தை கலைக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களாம்.
விளையாடிய பணம்: இப்படி இருக்கும்போது முதல் மனைவிக்கு முறையாக இந்த விஷயத்தைச் சொல்லித்தான் இரண்டாவது திருமணத்தையே செய்து கொண்டுள்ளார். இது மட்டும் இல்லாமல், முதல் மனைவிக்கு பல கோடிகள் மதிப்பிலான சொத்துக்களையும், பணம் மற்றும் நகைகளை கொடுத்து தனக்கு எதிராக எந்த பிரச்னையும் செய்ய வேண்டாம், இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என்பதற்காக நான் ஒருபோதும் உன்னை தவிர்க்கமாட்டேன். எல்லா இடங்களிலும் உனக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று கூறினாராம். அவரது இந்த பேச்சைக் கேட்ட மனைவி குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து அமைதியாகி கொண்டாராம். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள், பணம் விளையாடுது, அதான் இரண்டு பொண்டாட்டி கட்டிக் கொண்டு ஜகஜோதியாக வாழ்கிறார் என்று பேசி வருகிறார்கள்.

