STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Tragedy

3  

Amirthavarshini Ravikumar

Tragedy

குடி குடியை கெடுக்கும்

குடி குடியை கெடுக்கும்

2 mins
302

சரண் போதை பழக்கத்துக்கு அடிமைஆகியிருந்தான். இவனது மனைவி கமலா வயல் வேலைக்கு செல்வாள். இவர்களுக்கு அமலா என்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் இருந்தாள். கமலாவிற்கு அல்சர் இருப்பதால் அடிக்கடி அவளுக்கு வயிறு வலி ஏற்படும். அவளது அந்த வியாதியை தீர்க்க போதிய அளவு பணம் இல்லாததால் வலி ஏற்படும் பொழுது அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் மாத்திரை மட்டும் வாங்கி உண்பாள். சரண் போதையில் இரவு வீட்டிற்கு வரும் பொழுது கமலாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து அவனை அடிப்பான். ஒருமுறை இவ்வாறு சண்டை நடக்கையில் அமலா சரணை போய் தடுக்க சரண் அவளை தள்ளி விட்டான். அமலா அருகில் இருந்த மண்வெட்டியின் மேல் போய் விலை அவளது நெற்றியில் அது வெட்டியது. ரத்தம் அவளுக்கு தலையில் இருந்து வர சரண் போதையில் அவளை தள்ளாடி தள்ளாடி தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றான். அங்குள்ள மருத்துவர்கள் கமலாவிற்கு "ஏபி நெகட்டிவ்" இரத்தம் வேண்டும் என கூறினர். தங்களது ரத்த வங்கியில் அது இல்லாததால் யாரிடமாவது வாங்க வேண்டும் என கூறினர். அந்நேரத்தில் சரன் எனக்கும் அதை ரத்தம் தான் என்றான். ஆனால் மருத்துவர்கள் தாங்கள் மது அருந்தி இருப்பதால் உங்களால் இப்பொழுது ரத்தம் கொடுக்க இயலாது என்றனர். சரணும் நிறைய பேரிடம் கேட்டுப் பார்த்தான். ஆனால் யாரிடமும் அந்த ரத்தம் கிடைக்கவில்லை. சற்று நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் அமலா அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டாள். கமலாவும் சரணம் அந்த இடத்திலேயே கதறி அழ ஆரம்பித்தனர். சிறிது நாட்களில் அமலா இறந்ததற்கு தான்தான் காரணம் என நினைத்து மீண்டும் அதிகமாக குடிக்க ஆரம்பித்தான். ஒரு நாள் கமலா இதைப் பற்றிக் கேட்கவும் அவன் மீண்டும் கோபமானான். இருவருக்கும் சண்டை நேர்ந்தது. சண்டை போடும் பொழுது திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவரிடம் கேட்கையில் அதிக போதை பழக்கத்தினால் அவருக்கு நிகழ்ந்த விபரீதம் தான் இது என்றனர். உடல்நிலை சரியான சிறிது நாட்களிலேயே மறுபடியும் அவன் போதை பழக்கத்தை ஆரம்பித்தான். கமலா எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால் அவன் கேட்கவில்லை. கமலா வாங்கி வந்த சம்பளம் அனைத்தையும் இவனை குடித்துக் கரைத்தான். சிறிது நாட்களில் வறுமை வாட்டியதால் நோய்வாய்ப்பட்டு கமலாவும் இறந்தாள். அக்கம்பக்கத்தினர் சரணை தவறாக பேச ஆரம்பித்தனர். இதனால் இரவு பகல் பாராது குடித்தான். ஒருமுறை அவன் குடித்து விட்டு வருகையில் அவன் மீது லாரி மோதி இறந்தார். அவனது குடிப்பழக்கம் அவனது குடும்பத்தாரையும் அழித்தது இவனையும் அழித்தது.


Rate this content
Log in

Similar tamil story from Tragedy