ராசி
ராசி
பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் உடன் ராசிக்கும் ரமேஷுக்கும் திருமண ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் ரமேஷ் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லாதவன் போல் தென்பட்டான். நலங்கு வைக்கும் சடங்கின் பொழுதும் ரமேஷின் முகம் வாடி இருந்தது. இதை பார்த்த ராசி, ரமேஷை தனியாக சந்தித்து கேட்டாள்.
அப்பொழுது ரமேஷ் அவளிடம் தான் சாதிக்க நினைத்ததை இன்னும் முடிக்கவில்லை என்றும், எனது லட்சியங்கள் நிறைவேறிய பிறகு தான் கல்யாணத்தைப் பற்றி யோசிக்க வேண்டும் என கூறினான். உடனே ராசி சற்று யோசித்தாள். "திருமணத்தை இரண்டு நாளில் வைத்துக்கொண்டு இப்பொழுது நிறுத்துவது கடினம் அதனால் என்னிடம் ஒரு யோசனை உள்ளது.
கல்யாணம் முடிந்தால் என்ன நான் தங்களது கணவுக்கு தடையாக இருக்க மாட்டேன். உங்கள் லட்சியம் ஈடேறும் வரை நான் உங்களுக்கு தொந்தரவு தரமாட்டேன் உங்களுக்கு ஒரு பக்கபலமாக இருப்பேன்" என்று ரமேஷின் கையை பிடித்து சத்தியம் செய்தாள். உடனே ரமேஷ் "இப்பொழுது இப்படிதான் கூறுவீர்கள். அதன் பின் அனைவரும் மாறி விடுவார்கள்" என்றான். "ஒருவேளை நான் மாறிவிட்டதாக தோன்றினால் அந்த நொடியே உங்களை விட்டு செல்வேன் தாங்கள் லட்சியத்தை அடையும் வரை உங்கள் அருகில் கூட வர மாட்டேன்." என்றாள். ரமேஷ் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். கல்யாணமும் இனிதே நடைபெற்றது.
நாட்கள் கடந்தது. ஒரு நாள் ராசி, ரமேஷிடம் தங்களுக்கு என்ன லட்சியம் உள்ளது? என்று கேட்டாள். அதை அவன் சொல்ல மறுத்து விட்டான். ஒருமுறை ராசி தனது அறையை சுத்தம் செய்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு பை அவள் மேல் விழுந்தது. அதில் நிறைய தாள்கள் இருந்தது.
அதை எடுத்து வாசிக்கும் பொழுது தான் தெரிந்தது அது அனைத்தும் ரமேஷ் சிறுவயதிலிருந்து எழுதிய கதைகள். அதில் ஒரு தாளில் "எழுத்தாளன் ரமேஷ்" என பெரிய எழுத்தில் எழுதி இருந்தது. இதை பார்த்த ராசி, " இதை புத்தகமாக வெளியிட்டால் என்ன " என யோசித்தாள். அந்தத் தாள்களை எல்லாம் எடுத்து, வரிசைப்படி அடுக்கினாள். அதை புத்தகம் வெளியிடும் நிறுவனத்திற்கு சென்று கொண்டு கொடுத்தாள்.
இந்த தாளில் உள்ள கதைகளை புத்தகமாக வெளியிட வேண்டும் என கூறினாள். இரண்டு வாரங்களில் அந்தப் புத்தகத்தை பிரிண்ட் செய்யும் பணி நிறைவடைந்தது. ராசி அந்த புத்தகத்தை புத்தக கண்காட்சி விழாவில் வெளியிட எண்ணினாள். அதற்கான ஏற்பாடுகளையும் யாருக்கும் தெரியாமல் செய்தாள். புத்தக கண்காட்சியும் வந்தது. ராசியின் வற்புறுத்தலால் ரமேஷ் அந்தப் புத்தகக் கண்காட்சிக்கு அவளுடன் சென்றான். அங்கு அவன் உள்ளே நுழையவும் எழுத்தாளன் ரமேஷ் என்ற சத்தம் ஒலிக்க திகைத்துப் போய் நின்றான்.
ராசி, " உங்களைத்தான் மேடையில் அழைக்கிறார்கள்" என்றாள். ரமேஷ் மேடைக்கு சென்றான் புத்தகம் வெளியிடும் வரை அவனுக்கு ஏதும் புரியவில்லை. கீழே இருந்து ராசி "எழுத்தாளர் ரமேஷ்" என்று கூறும் போதெல்லாம் மகிழ்ச்சியில் கத்திக்கொண்டே இருந்தாள். விழா முடிந்ததும் ஒரு ரமேஷ் ராசி இடம் வந்து என்ன நடக்கிறது என்று கேட்டான். ராசி நடந்தவற்றைக் கூறினாள். அப்பொழுது ரமேஷ் இதுதான் தன் வாழ்நாள் லட்சியம் என்று கூறினான். ராசி திகைத்துப் போய் நின்றாள்.
" இதுவா உங்களது லட்சியம்?"
"ஆம் ராசி. உன் பெயரில் மட்டும் ராசி இல்லை நீயே எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமான ராசி"என்றான்.
ராசியின் ராசியால் பல நாள் கனவு இன்று நினைவாக மாறியது என அவளைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளுக்குள் அவளைப் பற்றி எண்ணி சிலிர்த்துக் கொண்டான். அந்தப் புத்தகமும் நாளடைவில் வெற்றியை அடைந்தது. ரமேஷின் வாழ்வில் வெற்றி மழை பொழிந்து. இவர்களது உறவிலும் காதல் துளிர்விட்டது.
