பிறந்தநாள் பரிசு
பிறந்தநாள் பரிசு
கரண் தனது நண்பனுக்கு பிறந்தநாள் பரிசு வாங்க நினைத்தான். அவனுக்குப் பிடித்த ஒரு ஐம்பது ரூபாய் மிட்டாயை வாங்க எண்ணினான். இதை கரண் தனது அம்மாவிடம் கூறியபோது அவர் மறுத்துவிட்டார். அவன் எவ்வளவு கேட்டும் அவனது அம்மா முடியாது என்று கூறிவிட்டார். என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தான். அப்பொழுதுதான் அவன் கடைக்கு செல்லும் பொழுதெல்லாம் அவன் அம்மா இவனுக்கு இரண்டு ரூபாய் கொடுப்பது ஞாபகம் வந்தது. அதை எல்லாம் இனி சேர்த்து வைக்க வேண்டும் என முடிவு செய்தான். சேர்த்து வைக்க ஆரம்பித்தான். ஆனால் பிறந்தநாள் முன்தினம் அவன் தனது உண்டியலை எடுத்து அவன் அம்மாவிடம் கொடுத்து அதில் உள்ள ரூபாயை எண்ணிப் பார்க்கச் சொன்னான். அதில் வெறும் 35 ரூபாய் மட்டுமே சேர்ந்து இருந்தது. உடனே அவனது அம்மா அதில் கரனுக்கு தெரியாமல் 15 ரூபாய் போட்டு 50 ரூபாய் வந்துவிட்டது நீ இப்பொழுது மிட்டாய் வாங்கலாம் என்றாள். அவனும் மிட்டாய் வாங்கி விட்டு, மறுநாள் காலை அவனது நண்பனுக்கு பரிசளித்தான். நண்பனும் மகிழ்ந்தான் நண்பன் மகிழ்வதை பார்த்து தானும் மகிழ்ந்தான்.
