Amirthavarshini Ravikumar

Children Stories Children

3  

Amirthavarshini Ravikumar

Children Stories Children

பேராசை ராஜா

பேராசை ராஜா

1 min
219


ஒரு ஊரில் ஒரு பேராசை பிடித்த முட்டாள் ராஜா இருந்தார். மக்களிடம் அதிக வரி வசூலிப்பது அவரது வழக்கமாக இருந்தது. இதனால் மக்கள் மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டனர். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என ஊர் மக்கள் நினைத்தனர். ஒருநாள் ராஜா மக்களிடம் அனைவரும் ஒரு பொற்காசுகளை அரண்மனையில் வந்து கொடுக்க வேண்டும் என ஆணையிட்டார். இதையே ஆணையை பயன்படுத்திக் கொண்டு மக்கள் அனைவரும் தங்களது பொருள் காசுகள் ஒரு ஊசியை செலுத்தி வைத்தனர். அதை ராஜா கையில் கொடுக்கும் போது அது ராஜாவின் உள்ளங்கையை கிழித்தது. ராஜா பொற்காசுகளை சுற்றி சுற்றி பார்த்தார் ஆனால் அதில் ஊசி இருப்பது அவருக்கு தெரியவில்லை. அவர் தனது அறைக்கு வந்து யோசித்தார். அப்பொழுது அங்கு மக்களுடன் வந்த புரோகிதரிடம் "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என கேட்டார். எனக்கு கால நேரம் எவ்வாறு உள்ளது என கணித்து கூறுங்கள்" என்றார்.


அப்பொழுது புரோகிதர், " ராஜா உங்களுக்கு தங்க நோய் என்ற தீர்க்க முடியாத வியாதி வந்து உள்ளது போலும். அதனால்தான் நீங்கள் பொற்காசுகளை தொடும் பொழுது அது உங்களை காயப்படுத்துகிறது" என்றார். "இப்படி எல்லாம் நோய் இருக்க வாய்ப்பு இல்லை நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம்" என கூறி புரோகிதரை அனுப்பி வைத்தார். மறுநாளும் அதே நடந்தது. கை காயம் அடைந்தால் ராஜா மிகவும் அவதி அடைந்தார். மறுபடியும் புரோகிதர் ராஜாவிடம் சென்று ராஜா இந்த நோய்க்கான ஒரே தீர்வு நீங்கள் வாங்கிய தங்கத்தை மக்களிடமே கொடுத்துவிடுவது என்றார். ராஜா முடியாது எனக் கூறவும் "நீங்கள் கொடுத்து தான் ஆக வேண்டும் ராஜா இல்லை என்றால் வலிகள் அதிகம் ஆகும்" என்றார். அப்பொழுது அவர் கையில் எதிர்பாராத விதமாக அருகில் உள்ள ஈட்டி அவர் கையை மேலும் காயம் ஆக்கியது. இதை பார்த்து அந்த ராஜா பயந்து விட்டார். தான் மக்களிடம் இருந்து வாங்கிய அனைத்து பணத்தையும் மக்களிடமும் கொடுத்துவிட ஆணையிட்டார். மக்கள் மகிழ்ந்தனர் ஏழ்மையும் சிறிதாக குறைய தொடங்கியது.


Rate this content
Log in