மலர் குடும்பம்
மலர் குடும்பம்
ஒரு அழகிய கிராமத்தில் ஒரு கூட்டு குடும்பம் வாழ்ந்து வந்தது. மலர் 5 வயது குட்டிப்பெண். அம்மா அப்பா தாத்தா பாட்டி அத்தை என பதினைந்து நபர் கொண்ட அந்த குடும்பத்தில் ஒரு குட்டி தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தாள். ஒருநாள் அவளது பள்ளியில் நடன நிகழ்ச்சி நடக்கவிருந்தது. அதில் மலர் பங்கேற்க விருப்பப்பட்டாள். அதில் பெயரும் கொடுத்தாள். வீட்டிற்கு வந்து கூறுகையில் அவளது அம்மா அப்பா நாளை பள்ளி வந்து நான் விவரத்தை கேட்கிறேன் என்றனர். மறு நாள் பள்ளியில் மலரின் ஆசிரியர் இந்த நடனத்திற்காக பக்கத்து ஊரில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் அங்கே தான் நடக்கிறது என்றார். இதை மலரின் பெற்றோர் வீட்டில் வந்து கூறவும் அவளது தாத்தா பாட்டி இதெல்லாம் வேண்டாம் என்றனர்.
மலர் அழ தொடங்கி விட்டாள். உடனே மலரை அவளது பெரியப்பாவும் அண்ணனும் கடைக்கு தூக்கி சென்றனர். மலரின் அத்தை, "அவள் சிறு பிள்ளைதான். இந்த வயதில் தான் அனைத்தையும் கற்றுக் கொள்ளமுடியும். அவள் போட்டிக்கு போக வேண்டும்" என்றாள். வீட்டில் மலரின் அத்தை எல்லோரையும் சம்மதிக்க வைத்தாள். மலருடன் சேர்ந்து மலரின் சித்தியும் அவளை போட்டிக்கு தயார் செய்தாள். போட்டிக்கான நாளும் வந்தது. போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார். மலருக்கு பரிசு கொடுக்கையில் குடும்பத்தார் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். இது பலருக்கு இன்னும் பல போட்டியில் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ள அனைவரும் அவளுக்கு விதவிதமான மிட்டாய்களை வாங்கி தந்தனர் இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள் மலர். இன்னும் நிறைய போட்டிகளில் சேர்ந்து இதை போல் உங்களை சந்தோஷப்படுத்துவேண் என்றாள் மலர்.
