விபத்து
விபத்து
ஒரு முறை ரிஷி வீதியில் பந்து விளையாடி கொண்டிருந்தாள். அப்பொழுது பந்து அவள் கையில் இருந்து விழுந்து சாலையை நோக்கி சென்றது. ரிஷியும் அந்த பந்து பின்னாடியே செல்ல ஒரு வாகனம் அவள் மேல் மோதியது. காலில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டாள். அந்த வாகன ஓட்டுநரே ரிஷியின் மருத்துவ செலவை ஏற்றுக்கொன்றார். ரிஷி மயங்கிய நிலையில் இருந்தாள். அன்று இரவு ரிஷி ஒரு தேவதையுடன் தன் அம்மாவிடம் "நான் போகிறேன் அம்மா... "
"வேண்டாம் ரிஷி... " என்று அவள் அம்மா அலறி கொண்டே விழித்தாள். கனவு என்று தெரிந்த உடன் தான் அவளுக்கு உயிர் வந்தது. காலையில் மருத்துவர்கள், "ரிஷி சரிஆகிவிட்டாள். நீங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லலாம். ஆனால் அவள் அதிகமாக நடக்க கூடாது "என்றனர். ரிஷியின் பெற்றோர் மருத்துவருக்கு நன்றி கூறி கிளம்பினர்.
