STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Children Stories Others Children

4  

Amirthavarshini Ravikumar

Children Stories Others Children

பாசமலர்

பாசமலர்

1 min
311

 அண்ணன் தங்கை உறவு என்றாலே ஒரு மகிழ்ச்சியூட்டும் உறவுதான். அண்ணனும் தங்கையும் சண்டையிட்டுக் கொள்வது பாசம் இருந்தாலும் வெளிக்காட்டாமல் இருப்பது எல்லாம் ஒரு தனி சுகம் தான். தனக்குள் எவ்வளவு சண்டையிட்டுக் கொண்டாலும் பிறரிடம் விட்டுக்கொடுக்காத உறவு இந்த உறவு. 


     சாந்தினி சரவணன் இருவரும் அண்ணன் தங்கை. சாந்தினி ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள். சரவணன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இருவரும் ஒரே பள்ளியி தான் படித்து வந்தனர். அன்று பள்ளியில் சாந்தினி இடம் "அவளது தோழிகள் உனக்கு யார் சூப்பர் ஹீரோ? யாரோ உனக்கு ரொம்ப பிடிக்கும்? " என்றார்கள். சாந்தினிக்கு பதிலளிக்க தெரியவில்லை. அந்நேரத்தில் தேவா சாந்தினியிடம் "நீதான் சக்தி பேனாவை திருடிட்ட அத எடுத்து குடுத்துட்டு அவகிட்ட " என்றான் . சாந்தினி அழுதுகொண்டே சரவணனை பார்க்க வந்தாள். சரவணன் ஏன் அழுகிறாய் என்று கேட்க "அண்ணா, நான் சக்தியின் பேனாவை திருடவில்லை. ஆனால் தேவா, சக்தி பேனாவை நான்தான் திருடினேன் என்று கூறுகிறான்" என்றாள். உடனே சரவணன் சாந்தியின் வகுப்பறைக்கு சென்று அனைவரது பையையும் சோதனை போட ஆரம்பித்தான். அந்தப் பேனா தேவாவின் பையில் இருந்தது. இதை பார்த்தவுடன் சரவணன் அவனை திட்டி ஆசிரியரிடம் அழைத்துச் சென்றான். ஆசிரியர் தேவாவை கண்டித்தனர். சரவணன் சாந்தினியிடம் " எந்த சூழ்நிலையிலும் அழக்கூடாது தைரியமாக இருக்கவேண்டும்" என்றான். அப்பொழுது சாந்தினி "அண்ணா நீங்க தான் என் சூப்பர் ஹீரோ" என்றாள். சரவணன் சிரித்துக்கொண்டே வகுப்பறைக்கு செல் என்று கூறிவிட்டு அவனும் சென்று விட்டான்.


Rate this content
Log in