தொழிலாளி
தொழிலாளி
ஒரு தனியார் நிறுவனம் இருந்தது. தங்களுக்கு வந்து சேரும் திட்டங்களை அதிக பணம் வாங்கி முடித்துக் கொடுத்தனர். ஆனால் வேலைக்காரர்களுக்கு குறைவான சம்பளத்தை கொடுத்து வந்தனர். வேலைக்காரர்கள் சம்பளத்திற்காக போராட்டம் நடத்தியும் பயனில்லாமல் போனது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சம்பளத்தை கூட்டி தருவதற்கு முன்வரவில்லை. இனியும் போராட்டம் நடந்தால் உங்களது வேலை போகிவிடும் என்று கூறினார். அதனால் அனைவரும் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்க மீண்டும் ஆரம்பித்தனர். ஒரு முறை தொழிலாளர் ஒருவருக்கு வேலை நேரத்தின் போது அடிபட்டது. அப்பொழுது அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் மருத்துவ நிறுவனம் " இது தற்செயலாக நடந்தது என்று எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்கள் நிறுவனத்தில் இருந்து எங்களுக்கு பதில் அளித்தால் மட்டுமே சிகிச்சையை தொடர்ந்து அளிக்க முடியும்" என்றார்கள். இதை முதலாளியிடம் சொல்லியும் அவர் எதுவும் செய்யவில்லை. அந்த தொழிலாளர் இறந்துபோனார். இதை பார்த்து மீதி தொழிலாளர்கள் இனி இந்த நிறுவனத்தில் வேலை செய்தால் நமக்கும் இதே நிலைமைதான் என அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.
முதலாளிக்கு ஒரு 2 மாதம் வாழ்க்கை நன்றாக ஓடியது. அதன்பின் அவர் கையிலும் பணம் இல்லாமல் போக தொடங்கியது. வீட்டில் அவரது மனைவி வேலைக்கு சென்றும் பணம் போதிய அளவுக்கு இல்லை. அப்பொழுதுதான் அவர் உணர்ந்தார் தொழிலாளர்கள் இருந்தால் மட்டும்தான் முதலாளிகள் உயிர்வாழ முடியும் என்று. இறந்து போன தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு தருவதாக கூறினார். மீண்டும் அனைத்து தொழிலாளர்களையும் வேலைக்கு அழைத்தார். தான் சரியான ஊதியத்தை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். வாக்குறுதியை நம்பி அனைத்து தொழிலாளர்களும் வேலைக்கு வந்தனர். மீண்டும் அந்த நிறுவனம் வளர ஆரம்பித்தது. தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடும் கொடுத்தார்.
