பிள்ளை அன்பு
பிள்ளை அன்பு
மணி மற்றும் அவரது மனைவி மேகலை இருவரும் மருத்துவராக பணிபுரிந்து வந்தனர். அவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும் இருந்தாள். மூவரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். மணியும் மேகலையும் மருத்துவமனையிலிருந்து மாலை 6 மணி அளவில் தான் வீடு திரும்புவார்.
காலை தியாவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவர்களும் வேலைக்கு செல்வார்கள். ஆனால் இந்த கொரோனா கால கட்டத்தில் அந்த நேரம் சற்று நீடித்தது. இருவரும் இரவு ஒன்பது முப்பது மணி அளவில் நான் வீட்டிற்கு வருவார்கள். அதுவரை அவர்களது மகள் தியா இணையதளத்தில் போட்டிகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துக் கொண்டு இருந்தாள். தான் வெற்றி பெற்ற பரிசு அனைத்தையும் தன் அம்மா அப்பாவிடம் காட்ட வேண்டுமென விருப்பப்பட்டாள். ஆனால் காலச் சூழ்நிலையால் அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்த உடனே சோர்வில் சிறிது நேரம் அவளுடன் நேரத்தை கழித்து விட்டு உறங்கச் சென்று விடுவார்கள். அன்று இரவு அவள் ஒரு தாளில் "மிஸ் யு அம்மா அப்பா" என எழுதி வைத்து விட்டு உறங்கி விட்டாள். காலை மணியும் மேகலையும் வேலைக்கு செல்லும் முன் அந்தத் தாளை இருவரும் பார்த்தனர். மேகலை கண் கலங்கினாள். அன்று அவர்கள் இருவரும் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். அன்று தியா மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனது வெற்றிகள் அனைத்தையும் கூறினாள். அதன்பின் மணியும் மேகலையும் தியாவிற்கு அவர்களின் வேலையைப் பற்றி புரிய வைத்தனர். சிறிது காலத்திற்கு இவ்வாறுதான் இருக்கும். இந்தக் கொரோனா காலம் முடிந்தபின் நேரத்தை கண்டிப்பாக தியாவுடன் விடுவதாகவும் கூறினார். தியா " இந்த காலம் முடியட்டும் என்றால்"சீக்கிரமாக இந்த காலம் முடியட்டும்" என்றாள்.
"ஆமாம் தியா எல்லாரும் மீண்டு வர வேண்டும்" என்றான் மணி . "நான் வேண்டி கொள்கிறேன் அப்பா" என்றாள் தியா.
மூவரும் பேசி சிரித்த வண்ணம் உறங்க சென்றனர்.
