ஏலியன் அட்டாக் - 14
ஏலியன் அட்டாக் - 14
மூவரும்,மறுநாள் வீடு மாறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நேரம்... ஏதோ சத்தம் கேட்டு, அனு ஜன்னல் அருகில் சென்று பார்த்ததாள்.....வெளியில் பலத்த காற்று வீசியது..... இதில் ஆச்சரியம் என்னவெனில், முன்வாசலில் சாதாரணமாகவே இருக்க பின் வாசலில் மட்டும் சூறைக்காற்று சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது....
மூவரும் முன் வாசலிலும் பின் வாசலிலும் நடப்பது புரியாமல் மாற்றி மாற்றி குழப்பத்தில் பார்த்து கொண்டிருந்தார்கள்.....,
"என்னடா இது..?.. முன்னாடி அமைதியா இருக்கு...., பின்னாடி ஆர்ப்பாட்டம் இருக்கு....?!!", முகிலன் எழுந்து பின் வாசலை நோக்கி நகர..., "என்னனு தெரியாம நீ பாட்டுக்கு போகாதா டா...." , முந்தைய நாள் இரவு நடந்த சம்பவத்தை நினைத்த அனுவின் குரல், அவனை தடுத்தது....,
"என்ன அனு, இதுக்கெல்லாம் போய் பயந்துகிட்டு...., வெறும் காத்துதான்...., நா போய் என்னன்னு பாத்துட்டு வரேன்.... நீ இங்கேயே இரு...", என்று கூறி பின் வாசலைத் திறக்கக் சென்றான்....., "இருடா நானும் வரேன்...", என்று மாயா அவனை பின் தொடர..... "அட என்னங்கடா...., என்ன மட்டும் தனியா விட்டுட்டு போறீங்க", என்று அனுவும் சேர்ந்து அவர்களை பின் தொடர்ந்தாள்.....
"யாரோ.... என்னனு தெரியாம வர மாட்டேன்னு சொன்னாங்க..... இப்ப எல்லாருக்கும் முன்னாடி வந்து நிக்கிறாங்க" , என்று பின்வாசல் கதவைத் திறக்கப் போன அனுவை பார்த்து முகிலன். நக்கலாய் சிரித்தான்....
நானும் வரேன் என்று ஓடிவந்த அனு, இவர்கள் இருவரையும் ஓவர்டேக் செய்து, இருவருக்கும் முன்னரே வாசல்கதவை அடைந்திருந்தாலும், உள்ளுக்குள் ஒருவிதமான பயம் இருந்து கொண்டேதான் இருந்தது....
வாசல் கதவில் கை வைத்துக்கொண்டு.... திறக்கலாமா? வேண்டாமா?என்று குழம்பி மனதுக்குள் ஒரு பெரிய பேச்சுவார்த்தை பட்டிமன்றம் நடந்துக் கொண்டிருக்கையில்....., "தள்ளு டி.., நா தெறக்குறேன்..... நீ இந்த ஜென்மத்துல திறக்க மாட்ட....", மாயா அவளை தள்ளி விட்டு கதவை திறந்த அந்த நொடி...., மூவரும் வாயை பிளந்து நின்றனர்....
*************
"இந்த விஷயம் கண்ணனுக்கு தெரிஞ்சுருக்குமோ?, அப்படி தெரிஞ்ஜா பெரிய பிரச்சினை ஆயிரும்..... அவனுக்கு தெரியக்கூடாது...... அது தெரிஞ்சா அவன் சும்மா இருக்க மாட்டான்...... ஏதாவது பண்ணி அவன் நினைச்சத நடத்தியே தீருவான்.... அத நா நடக்க விடமாட்டேன்..... நிச்சயமா நடக்க விடமாட்டேன்.....", வில்சன் தனக்குத்தானே பேசிக்கொண்டு இருந்தாள் அந்த சமயம் உள்ளே நுழைந்த மோகன், " சார் நீங்க கேட்ட எல்லாம் மெஷின்சும் ரெடி...., உங்க வேலையை நீங்க தொடங்கலாம்.... டாக்டர் கண்ணனோடு திட்டத்தை நீங்க ஈசியா இது மூலமா ஒன்னும் இல்லாம ஆகிடலாம்," என்று கூறிவிட்டு மெல்லிய புன்னகையை வீசினாள் மோகன்.
" அது எனக்கு தெரியும் Mr.மோகன்.... நீ சொல்லணும் அவசியமில்லை... நீ கிளம்பு...." , என்று தனது வேகக்குறலை மோகனை நோக்கி வீசி எறிந்தார் வில்சன்.
"இவருக்கு அசிஸ்டென்டா இருக்குறதுக்கு......, எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்", மனதிற்குள்ளேயே மைண்ட் வாய்ஸ் வாசித்துவிட்டு, அந்த அறையை காலி செய்தார் மோகன்...
மோகனை வெளியே அனுப்பி விட்டு, தன் கம்ப்யூட்டர் உடன் அவன் கொண்டுவந்த பொருட்களின் உள்ள சில ஒயர்களை இணைத்து.... பின் அவன் கொண்டு வந்த ஒரு தொலைநோக்கியை, தன் அறை ஜன்னலில் பொருத்தி விட்டு.... அதனுடன் சில சாதனங்களை இணைத்து...., தொலைநோக்கியில் தெரிவதை கம்யூட்டரில் தெரியுமாறு பொருத்தினார்....
பின் கீபோர்டுல் உள்ள சில பட்டன்களை அழுத்தினார்.... அப்போது ஸ்க்ரீனில் தெரிந்த அந்த விஷயத்தை கண்டு அவரின் விழிகள் இருமடங்காய் விரிந்தது....
**********
தங்கள் முன் வந்து நின்ற பெரிய பறவையைக் கண்டு மூவரும் வாய்பிளந்து நிற்க.... அந்தப் பறவையின் தலை மட்டும் திறந்தது.....
"என்னங்கடா...!!, பறவைக்கு மண்ட ஓபன் ஆகுது.....!!!", முகிலன் அந்த அதிர்ச்சியிலும் அந்தப் பறவையை கலாய்க்க மறக்கவில்லை....,
திறக்கப்பட்ட தலையின் வழியே முதலில் வெளிவந்த நம் ஃப்ரீ பர்டே....,
"அட ...! பால் பறக்குது.....! எப்படி இந்த பால் பறக்குது..... ஒருவேளை இதுவும் கண்ணன் சார தேடி வந்திருக்குமோ?", முகிலன் அனைத்தையும் தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருக்க.... அவனையே நோக்கி வந்தது நம் ஃப்ரீ பர்டு....
அந்தப் பந்து, தன் தம்பியை நெருங்குவதை கண்ட அனு...., அவனோ... தன்னையே மறந்து எதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி போய் கிடப்பதை கண்டு....., சுற்றும் முற்றும் தேடிப் பிடித்து ஒரு கட்டையை கையில் எடுத்து, அதை அடிக்க கையை ஒங்க.....
"அத அடிக்காதிங்க....அது என்னோடது தான்.... நான் தான் அதோட ஓனர்..... என்று அந்த தலையின் வலியாக வெளியே வந்தான் சொஹார...
தனை நெருங்கிய அந்த பறக்கும் பந்தை ஒருநோடி பார்த்த முகிலன்.... அந்த குரல் கேட்ட மறு நொடி....., இத்தனை வசீகரிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் எவரோ? என்ற ஆவலில் குரல் வந்த திசை நோக்கி திரும்பியவன்.... இதயம் நொறுங்க அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.... , மற்ற இருவருக்கும் இதே நிலைமை தான்.... ஆனால் இதில் அதிகம் பாதிக்கப்பட்டது என்னவோ முகிலன் தான்....
"ஹேய்..... நீ பொண்ணா இல்ல பையனா?", அவன் ஒரு பெரிய பறவையின் தலைக்குள் இருந்து வந்தது அவளுக்கு பெரிதாக தெரியவில்லை.... அவனின் குரலை பற்றி ஆராய்ந்தாள் மாயா...
அவனும் சற்றும் சளைக்காமல்.....,"அத ஏன் நீ இப்ப பையனோட குரல்ல கேக்குற?, நார்மலா கேட்டா நா சொல்ல முடியாதுனா சொன்னேன்?, என்று மீண்டும் அதே இனிமையான, வசீகரிக்கும் குறளில் அவன் கேட்க....
தன் காதுகளுக்கு தான் எதோ ஆகிவிட்டதோ? என்று முகிலன் யோசிக்க தொடங்கினான்....
"என்னது.... நா பையனோட குரல்ல பேசுரெனா?.... நீ தான் டா பொண்ணோட கொறல்ல பேசுற....., எங்கள பாத்தா உனக்கு எப்டி தெரியுது?, உன் மிமிக்ரிய வேற யார்கிட்டயாவது போய் வச்சுக்கோ.... ", மாயா தன் பொறுமையின் எல்லையை தாண்டி தன் ஒட்டுமொத்த கோபத்தையும் ஒரே குரலில் சொஹாராவின் மீது காட்ட.....
அவனோ, "என்னது .... நா மிமிக்ரி பண்ணுறேனா? ,... இல்லவே இல்லை... இது தான் என்னோட ஒரிஜினல் வாய்ஸ்.... நீ தா மிமிக்ரி பண்ணுற....", சொஹாராவிர்க்கும் மாயாவிர்க்கும் இடையில் ஒரு அடி இடைவெளி தான் இருந்து .... இருவரும் ஒருவரை ஒருவர் விழி பிதுங்கும் அளவிற்கு முறைத்து கொண்டிருந்தனர்.
அனுவும் முகிலனும் என்னடா நடக்குது இங்க.....? என்பது போல் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவர்களின் இந்த வாக்குவாததை கண்டு, காண்டான ஃப்ரீ பர்ட் , இருவருக்கும் இடையில் சென்று, இருவர் கண்களிலும் படுமாறு சிவப்பு நிற ஒளியை கொண்ட டார்ச் லைட் ஒன்றை ஒளிரவிட்டது.... அதிலே இருவருக்கும் கண்கள் கூச..... இருவரும் கண்களை மூடி இரண்டு அடி பின்னே நகர்ந்தனர்......
"சொஹாரா.... நம்ம பூமிக்கும் இந்த பூமிக்கும் நெறய வித்தியாசம் இருக்குனு உனக்கு தெரியும்ல..... அதுல ஒன்னு தா இது....", என்று அவனை நோக்கி முறைப்பது போன்ற உருவத்தை தன் ஸ்க்ரீனில் வரவைத்தது ஃப்ரீ பர்ட்.
என்னஆஆஆஆது ஊஊஊ... இன்னொரு பூமியா?, என்று மூவரும் வாய் பிளந்தார்கள்.....
"ஓஹ்... அப்படியா, அப்பனா சரி....
ஐ ஆம் சாரி....", சொஹாரா ஃப்ரீ பர்டின் சொல்லிற்கு சலித்துகொண்டு .... கைகளை கட்டி கொண்டு , மாயாவை பார்த்து மன்னிப்பு கூறினான்.
இவர்கள் மூவரும் இன்னும் அவனை வாய் பிளந்து பார்த்துகொண்டு இருந்தார்கள்.
"சொஹாரா...... ஷேக் ஹேன்ட் குடுத்து தான் மன்னிப்பு கேக்கணும் ...... அத மறந்துட்டியா....?", ஃப்ரீ பர்ட் அதே கோபமான கண்களை ஸ்க்ரீனில் வால்பேப்பராக செட் செய்து விட்டது. அவனின் முகத்திற்கு முன் வந்து முட்டுவதை போல பறந்தது ஃப்ரீ பர்ட்...
"சரி, சரி.....", என்று வாய்க்குள்ளேயே முணங்கிக்கொண்டு தன் கையை அவர்களை நோக்கி நீட்ட....., முகிலன், இவளோ அழகான குரலுக்கு இப்படி ஒரு கேவலமான மூஞ்சியா?, என்று சிந்தித்துக் கொண்டே இதை கவனிக்கவில்லை..... அவன் கை நீட்டி மறு நொடி..... , அனுவும் மாயாவும் மயங்கி விழாத குறை தான்.... இருவரும் அடித்தொண்டையில் இருந்து அலற..... அங்கிருந்த மரங்களில் இரவுநேரம் உறங்கிக்கொண்டிருந்த பறவைகள் முதல்கொண்டு ..... இவர்களுக்கு கம்பெனி கொடுத்து அலறியது...,
இவர்கள் அலறலை கேட்ட பின்பே சுயநினைவை அடைந்த முகிலன்,
"அடி லூசுகளா..., ஏண்டி இப்படி பேய பாத்த மாதிரி அலருறீங்க...?", என்று கோபத்தில் கத்த...... " பேய் தான்டா....", என்று நடுங்கும் குரலில் மாயா பதிலளிக்க... , குழப்பத்தில் முகிலன் திருதிருவென முழிக்க...., "என்ன டி சொல்லுற", என்று அவளை பார்த்து கேட்டதும்., அவனின் தாடையை பிடித்து சொஹாராவின் பக்கம் திரும்பினாள் மாயா....
அவ்வளவு தான்..... , முகிலனின் இதயம் கழண்டு கீழே விழவில்லை..... ஆனால் ஒருநொடி. .... அவனின் இதயம் துடிக்க மறந்து.... என்ன டா நடக்குது இங்க?...", என்று யோசித்துக்கொண்டு இருந்தது....
( பின்ன..... ஆரடிக்கு அப்பால இருகுறவனோட கை மட்டும் , தனியா வந்து ஷேக் ஹாண்டு குடுகுறதுக்கு வெயிட் பன்னுனா?, வேற என்ன பண்ணுறதான்?)
- தொடரும்.....
